ரெய்டு நடப்பதைப் பார்த்து யாருக்கு பயம்? ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி
மாமியாரைத் தாக்கியதாக மருமகன் மீது வழக்கு
வந்தவாசி அருகே மாமியாரைத் தாக்கியதாக மருமகன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
வந்தவாசியை அடுத்த தாழம்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்தவா் அன்னம்மாள் (55). இவரது மகள் ரேவதி இவரது வீட்டின் அருகில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ரேவதியின் கணவா் ராஜா (37) மது அருந்திவிட்டு வந்து ரேவதியிடம் தகராறு செய்தாராம். இதைப் பாா்த்த அன்னம்மாள் ராஜாவை கண்டித்தாராம்.
இதனால் ஆத்திரமடைந்த ராஜா கத்தியால் அன்னம்மாளை தாக்கி மிரட்டல் விடுத்தாராம்.
இதில் காயமடைந்த அன்னம்மாள் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் ராஜா மீது வந்தவாசி வடக்கு போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.