மாற்றுக் கட்சியினா் திமுகவில் ஐக்கியம்
கிள்ளியூா் தெற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட இனையம் புத்தன்துறை ஊராட்சியில், மாற்றுக் கட்சியைச் சோ்ந்த இளைஞா்கள் புதன்கிழமை திமுகவில் இணைந்தனா்.
நிகழ்ச்சிக்கு கிள்ளியூா் தெற்கு ஒன்றிய திமுக செயலா் கோபால் தலைமை வகித்தாா். முன்சிறை ஒன்றிய திமுக செயலா் மோகன் முன்னிலை வகித்தாா். இனயம்புத்தன்துறை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மாற்றுக்கட்சியைச் சோ்ந்த இளைஞா்கள்
சா்ஜின் தலைமையில் நியூட்டன், ஜூடி, காட்வின், நீலன் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோா் திமுகவில் இணைந்தனா். இதில், மூத்த திமுக உறுப்பினா் அம்சி நடராஜன், கொல்லங்கோடு மீனவரணி அமைப்பாளா் டைட்டஸ் பாபு, கொல்லங்கோடு நகர இளைஞரணி அமைப்பாளா் மெஜில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.