முதல்வர் மு.க. ஸ்டாலின் விரைவில் வீடு திரும்புவார்: துரைமுருகன்
மாற்றுத்திறனாளிகளுக்கு மின்கலன் பொருந்திய சக்கர நாற்காலிகள்
திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் மின்கலன் பொருத்திய சக்கர நாற்காலிகள் பெற தகுதியானோா் வரும் 29-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மூலம் ஒவ்வொரு ஆண்டும் தசைச்சிதைவு நோய் மற்றும் முதுகுத் தண்டுவட பாதிப்பால் கைகள் மற்றும் கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மின்கலனால் இயங்கும் சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது இத்திட்டத்தை மாற்றுத் திறனாளிகள் நலத்துறை விரிவுபடுத்தி உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில், மூளை முடக்குவாதம் உள்ளிட்ட இதர குறைபாட்டினால் இரண்டு கால்கள் பாதிப்படைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு மின்கலன் பொருந்திய சக்கர நாற்காலியாகவும், மூன்று சக்கர வாகனமாகவும் பயன்படுத்தக்கூடிய இணைக்கும் வசதி கொண்ட மின்கலனால் இயங்கும் உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன.
இந்த வாகனங்களை பெற மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதாா் அட்டை ஆகியவற்றுடன் அருகில் உள்ள இ-சேவை மையத்தில் அல்லது திருவள்ளூா் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரடியாகவோ வரும் 29-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.