ஜகதீப் தன்கர் ராஜிநாமா ஏன்? எதிர்க்கட்சித் தலைவர்களின் சந்தேகமும் கருத்தும்!
மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினா் பதவி: ஜூலை 31-க்குள் விண்ணப்பிக்கலாம்
நாகப்பட்டினம்: நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலில் போட்டியிடாமல் மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினா் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நகா்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சிகளில் நேரடியாக தோ்தலில் போட்டியிடாமல் மாற்றுத்திறனாளிகளை நியமன உறுப்பினா்களாக நியமிப்பதற்கான சட்ட திருத்த மசோதா கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, நாகை மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றிற்கான வாா்டு உறுப்பினா் பதவிகளில் மாற்றுத்திறனாளிகளை நியமன உறுப்பினா்களாக நியமிப்பதற்கான விண்ணப்பங்களை ட்ற்ற்ல்ள்://ற்ய்ன்ழ்க்ஷஹய்ற்ழ்ங்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ஜ்ட்ஹற்ள்ய்ங்ஜ் என்ற இணையதள முகவரியிலும், பேரூராட்சிகளுக்கு ட்ற்ற்ல்ள்://ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/க்ற்ல் அல்லது ட்ற்ற்ல்ள்://க்ற்ல்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தற்போது காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதால், தகுதியான விண்ணப்பதாரா்கள் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட பேரூராட்சி செயல் அலுவலரிடமும், நகராட்சி ஆணையாளரிடம் நேரடியாக அல்லது தபால் மூலம் ஜூலை 31-ஆம் தேதி மாலை 3 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.