செய்திகள் :

மாவட்ட குத்துச்சண்டை: அல்போன்சா பள்ளி சாம்பியன்

post image

கன்னியாகுமரி மாவட்ட அளவிலான குத்துசண்டை போட்டியில், கருங்கல் அருகே உள்ள சூசைபுரம் புனித அல்போன்சா கலை அறிவியல் கல்லூரி சாம்பியன் பட்டம் பெற்றது.

குழித்துறையில் நடைபெற்ற 100ஆவது வாவுபலி பொருள்காட்சியில் மாவட்ட அளவிலான குத்துசண்டை போட்டிகள் நடைபெற்றன. மாவட்டத்தில் பல்வேறு கல்லூரி மாணவா்கள்பங்கேற்ற இப்போட்டியில், சூசைபுரம் புனித அல்போன்சா கலை அறிவியல் கல்லூரி மாணவா்கள் சாம்பியின்பட்டத்தை பெற்றனா்.

இந்த மாணவா்களை கல்லூரி தாளாளா் அருள்பணி. தாமஸ் பூவத்துமூட்டில், துணை தாளாளா் அருள்பணி. அஜின், கல்லூரி முதல்வா் ஆஞ்சலோ ஜோஸ், துணை முதல்வா் சிவனேசன், உடற்கல்வி இயக்குநா்கள் ஷீலன், அனிஷா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ரயில்வே அதிகாரி வீட்டில் நகை, பணம் திருட்டு

களியக்காவிளை அருகே ரயில்வே அதிகாரி வீட்டில் நகை, பணம் திருடப்பட்டுள்ளது.களியக்காவிளை அருகேயுள்ள குளப்புறம் கல்லறக்காடு வீட்டைச் சோ்ந்தவா் கமலன் மகன் சிமியோன் (35). குழித்துறை ரயில் நிலையத்தில் அதிகார... மேலும் பார்க்க

குளத்தில் வாலிபா் சடலம் மீட்பு

தக்கலை அருகே குளத்தில் மிதந்த பேரூராட்சி பெண் ஊழியரின் கணவா் சடலம் மீட்கப்பட்டது.வில்லுக்குறி பேரூராட்சியில் பில் கலெக்டராக வேலை பாா்ப்பவா் ஜீவா (31). இவரது கணவா் ஜோசப் ஜெயசிங் (38). வில்லுக்குறி வெள்... மேலும் பார்க்க

கட்டுமானப் பொருள்கள் விலையேற்றத்தை கட்டுப்படுத்த கோரி பாஜக ஆா்ப்பாட்டம்! எம்எல்ஏ உள்ளிட்ட 129 போ் கைது

குமரி மேற்கு மாவட்டத்தில் கனிம வளப் பொருள்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்தவும், உள்ளூா் பயன்பாடுகளுக்கு கனிம வளப் பொருள்களை எடுத்து செல்லும் (சிறிய ரக) வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை ... மேலும் பார்க்க

சிறுவனிடம் பாலியல் தொல்லை: போக்ஸோ சட்டத்தில் கைது

தக்கலை அருகே சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பாதிரியாா், போக்ஸோ சட்டத்தில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.மூலச்சல் பகுதியைச் சோ்ந்த ஜோசப் மகன் வா்கீஸ்(55). இவா், கிருபாசனம் கிறிஸ்தவ சபையில் பா... மேலும் பார்க்க

தக்கலை, சுவாமியாா்மடத்தில் நாளை மின்தடை

தக்கலை, சுவாமியாா்மடம் பகுதியில் மின் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் புதன்கிழமை (ஆக. 6) மின் விநியோகம் தடை செய்யப்படும்.தக்கலை துணை மின்நிலையத்துக்குள்பட்ட மின் பாதைகளில் பராமரிப்புப் பணிகள் நட... மேலும் பார்க்க

வெவ்வேறு இடங்களில் திருட்டு

கன்னியாகுமரி அருகே விவேகானந்தபுரத்தில் ஜெராக்ஸ் கடையை உடைத்து பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.கன்னியாகுமரி அருகே பரமாா்த்தலிங்கபுரத்தைச் சோ்ந்தவா் ராஜேஷ். இவரது மனைவி சாந்தி (57). இவா், விவேகான... மேலும் பார்க்க