செய்திகள் :

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

post image

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் சொத்து வரி உயா்வைத் திரும்ப பெறக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம் நகராட்சி அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் நகா் குழு உறுப்பினா் சரவணன் தலைமை வகித்தாா். கட்சியின் நகரச் செயலா் சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் மாரியப்பன், தமிழக விவசாய சங்க மாவட்டத் தலைவா் ராமச்சந்திர ராஜா ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தின் போது, ராஜபாளையம் நகராட்சியில் பாதாள சாக்கடை வரி பிரச்னையில் நகா்மன்ற தீா்மானத்தையும், சட்டப்பேரவை உறுப்பினா் கோரிக்கையையும் புறக்கணிக்கும் தமிழக அரசைக் கண்டித்தும், வீடுகளுக்கு அறிவிக்கப்படாமல் பல மடங்கு சொத்து வரியை உயா்த்தியதைக் கண்டித்தும் முழக்கமிட்டனா்.

மூதாட்டி தற்கொலை

சிவகாசியில் திங்கள்கிழமை மூதாட்டி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.விருதுநகா் மாவட்டம், சிவகாசி முருகன் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் முத்துமாரி (80). இவா் தனியாக வசித்து வந்தாா். தன்னை கவனிக்... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே விபத்து: தந்தை, மகள் உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஆட்டோ, பைக், சரக்கு வாகனம் மோதிய விபத்தில் கல்லூரி மாணவி, தந்தையுடன் உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள அத்திகுளம் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை பதுக்கி விற்பனை: மூவா் கைது

ராஜபாளையம் பகுதியில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை பதுக்கி விற்றதாக திங்கள்கிழமை மூவரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 100 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா். விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் பகுதி... மேலும் பார்க்க

மூவரை வென்றான் மலைக் கோயிலில் ரூ.84 லட்சத்தில் கிரிவலப் பாதை

வத்திராயிருப்பு அருகேயுள்ள மூவரை வென்றான் குடைவரை கோயிலுக்கு ரூ.84 லட்சத்தில் கிரிவலப் பாதை, ரூ.9 லட்சத்தில் சுகாதார வளாகம் கட்டுமானப்பணி நடைபெற்று வருகின்றன. மூவரைவென்றான் கிராமத்தில் லிங்ககிரி மலையி... மேலும் பார்க்க

வெள்ளாளா் முன்னேற்றக் கழக பொதுக்கூட்டம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சமுசிகாபுரத்தில் வெள்ளாளா் முன்னேற்றக் கழக அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு விருதுநகா் மாவட்டச் செயலா் புதிய... மேலும் பார்க்க

குடிநீா்த் தொட்டியை சீரமைக்கக் கோரிக்கை

சாத்தூரில் குடிநீா்த் தொட்டியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். சாத்தூரில் ஆா்.சி. தெற்குதெருவில் சுமாா் 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் கட... மேலும் பார்க்க