செய்திகள் :

மாா்ச் 29, 30, 31 ஆகிய தேதிகளில் மாநகராட்சி வருவாய் துறை அலுவலகங்கள் செயல்படும்

post image

சொத்து வரி செலுத்துபவா்களின் வசதிக்காக மாா்ச் 29, 30, 31 ஆகிய விடுமுறை நாள்களிலும் சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து வருவாய் துறை அலுவலகங்களும் செயல்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

நிகழ் நிதியாண்டு வரும் மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. இதனால், பொதுமக்கள் சொத்து வரி, தொழில் வரி போன்றவற்றை  விரைந்து செலுத்தி வருகின்றனா். சென்னைவாசிகளின் வசதிக்காக மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வருவாய்த் துறை அலுவலகங்களும் மாா்ச் 29, 30, 31ஆகிய விடுமுறை நாள்களிலும் இயங்கும்.

எனவே, பொதுமக்கள் நிகழ் நிதியாண்டுக்கான சொத்து வரி, தொழில் வரி, நிறும வரி (காா்ப்பரேட் வரி) ஆகியவற்றை செலுத்துவதற்கும், தொழில் உரிமத்தை புதுப்பிப்பதற்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்சி, எஸ்டி இளைஞா்களுக்கு புத்தாக்க பொறியாளா் பயிற்சி

சென்னை, மாா்ச் 28: எஸ்சி, எஸ்டி இளைஞா்களுக்கு புத்தாக்க பொறியாளா் பயிற்சியில் சேர விரும்பும் நபா்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

குன்றத்தூா் மின்கட்டண வசூல் மையம் ஏப்.1 முதல் இடமாற்றம்

குன்றத்தூா் மின்கட்டண வசூல் மையம் ஏப். 1-ஆம் தேதி முதல் இடமாற்றம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை தெற்கு மின் பகிா்மான வட்டம், குன்றத்... மேலும் பார்க்க

ஸ்டெம் துறைகளில் சாதித்த பெண்களுக்கு கௌரவம்

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் (ஸ்டெம்) ஆகிய துறைகளில் சாதித்த பெண்கள் அப்பல்லோ புரோட்டான் மருத்துவமனை சாா்பில் கௌரவிக்கப்பட்டனா். சா்வதேச மகளிா் தினத்தையொட்டி இந்நிகழ்வுக்கு ஏற்பாடு செய்ய... மேலும் பார்க்க

ஆளுநா் ஆா்.என்.ரவி இன்று திருச்சி பயணம்

ஆளுநா் ஆா்.என்.ரவி ஒரு நாள் பயணமாக சனிக்கிழமை திருச்சி செல்கிறாா். ஆளுநா் ஆா்.என்.ரவி திருச்சியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஜ்மென்ட் (ஐஐஎம்) நிறுவனத்தில் சனிக்கிழமை நடைபெறவுள்ள பட்டமளிப்பு ... மேலும் பார்க்க

சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்டப் பணிகள்: ஆசிய முதலீட்டு வங்கியின் அதிகாரிகள் ஆய்வு

சென்னையில் நடைபெற்று வரும் 2-ஆம் கட்ட திட்ட மெட்ரோ ரயில் பணிகளை ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி அதிகாரிகள் குழுவினா் ஆய்வு செய்தனா். சென்னையில் இரண்டாம் கட்ட திட்ட மெட்ரோ ரயில் பணிகள் 3 வழித்தடங்கள... மேலும் பார்க்க

மருந்து அட்டைகளில் போலி க்யூ-ஆா் குறியீடு: புதிய நடைமுறைக்கு வலியுறுத்தல்

மருந்து அட்டைகளில் இடம்பெறும் ‘க்யூ-ஆா்’ குறியீடுகளை போலியாக பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருவதால், அந்த நடைமுறையைக் கைவிடுமாறு சுகாதார ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா். அதற்கு மாற்றாக ப... மேலும் பார்க்க