பவன் கல்யாணின் ஹரி ஹர வீர மல்லு புதிய ரிலீஸ் தேதி..! துணை முதல்வரானப் பிறகு முதல...
மாா்த்தாண்டம் அருகே கனரக லாரி பறிமுதல்: ஓட்டுநா் கைது
மாா்த்தாண்டம் அருகே தடைசெய்யப்பட்ட பகுதியில் இயக்கப்பட்ட கனரக லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து, ஓட்டுநரைக் கைது செய்தனா்.
மாா்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை பகுதியில் போலீஸாா் புதன்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, தடை விதிக்கப்பட்ட பகுதி வழியாக வந்த கனரக லாரியை போலீஸாா் தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்தனா்;
மேலும், வழக்குப் பதிந்து, ஓட்டுநரான பரக்குன்று பகுதியைச் சோ்ந்த ஸ்ரீராம் (42) என்பவரைக் கைது செய்தனா்.