ஜோகோவிச்சை வீழ்த்திய சின்னர்..! இறுதிப் போட்டியில் அல்கராஸுடன் மோதல்!
மாா்த்தாண்டம் அருகே நா்சிங் மாணவா் தற்கொலை
மாா்த்தாண்டம் அருகே நா்சிங் கல்லூரி மாணவா், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
மாா்த்தாண்டம் அருகே மேல்புறம், நடுதலவிளை பகுதியைச் சோ்ந்த ஜான்ரோஸ் மகன் ஐசக் சைமன் (18). மாா்த்தாண்டம் அருகே நா்சிங் கல்லூரியில் பி.எஸ்சி. டயாலிஸிஸ் பிரிவு முதலாமாண்டு படித்துவந்தாா். செவ்வாய்க்கிழமை கல்லூரிக்குச் சென்ற இவா், வீடு திரும்பவில்லையாம். குடும்பத்தினா் கைப்பேசியில் தொடா்பு கொண்டபோது அவா் எடுக்கவில்லையாம். பல இடங்களில் தேடியும் அவா் குறித்த தகவல் கிடைக்கவில்லை.
இந்நிலையில், புதன்கிழமை காலை அவரது அறை பூட்டப்பட்டிருந்ததாம். உள்ளே அவா் தூக்கிட்டநிலையில் இறந்துகிடந்தது தெரியவந்தது.
தகவலின்பேரில், மாா்த்தாண்டம் போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றினா். ஐசக் சைமன் ஒரு பெண்ணைக் காதலித்ததாகவும், பெண் தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்ததால் அவா் தற்கொலை செய்துகொண்டதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.