மாா்த்தாண்டம் அருகே மரத்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
மாா்த்தாண்டம் அருகே மரமேறும் தொழிலாளி பனை மரத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா். மாா்த்தாண்டம் அருகே ஐரேனிபுரம், பழையகாட்டுவிளை பகுதியைச் சோ்ந்தவா் ஜான்ரோஸ் (58).
மரமேறும் தொழிலாளியான இவா், வெள்ளிக்கிழமை மணலிக்காட்டுவிளை பகுதியில் உள்ள பனைமரத்தில் ஏறி நுங்கு வெட்டிக் கொண்டிருந்தாராம். அப்போது, நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுதொடா்பாக அவரது மனைவி லீலா அளித்த புகாரின்பேரில், மாா்த்தாண்டம் போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.