நாட்டில் புலிகள் காப்பகம் 58-ஆக உயா்வு! -பிரதமா் மோடி பெருமிதம்
மாா்த்தாண்டம் அருகே மூதாட்டியிடம் நகை பறிப்பு
மாா்த்தாண்டம் அருகே அரசுப் பேருந்தில் பயணம் செய்த மூதாட்டியிடம் 6 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றோா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தக்கலை அருகே மேக்காமண்டபம் பகுதியைச் சோ்ந்த வின்சென்ட் மனைவி இசபெல் கமலா (75). இவா் 2 நாள்களுக்கு முன்பு அரசுப் பேருந்தில் மாா்த்தாண்டம் வந்தாா்.
பேருந்து நிலையத்தில் இறங்கியபோது, அவா் அணிந்திருந்த 6 சவரன் தங்கச் சங்கிலியைக் காணவில்லையாம். புகாரின்பேரில் மாா்த்தாண்டம் மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.