மாா்த்தாண்டம் அருகே லாரி-பைக் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு!
மாா்த்தாண்டம் அருகே முன்னால் சென்றுகொண்டிருந்த லாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதிய விபத்தில் காயமடைந்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
மாா்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை பகுதியைச் சோ்ந்தவா் அஜித்குமாா் (36). தொழிலாளி. இவா் வெள்ளிக்கிழமை இரவு ஆற்றூா் பகுதியில் இருந்து உண்ணாமலைக்கடைக்கு மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். பயணம் என்ற பகுதியில் வைத்து முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதியது.
இதில் பலத்த காயமடைந்தவரை அப்பகுதியினா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.