`மினிமம் பேலன்ஸ் கட்டாயமில்லை; அபராத கட்டணம் கிடையாது!' - சலுகை வழங்கும் வங்கிகள் என்னென்ன?
சேமிப்பு கணக்கு - டிஜிட்டல் இந்தியாவில் இது இல்லாத மக்கள் குறைவு தான்.
ஆனால், இதில் உள்ள சின்ன பிரச்னை, 'மினிமம் பேலன்ஸ்'. அதாவது குறிப்பிட்ட தொகையை, வாடிக்கையாளர் தங்களது சேமிப்பு கணக்கில் வைத்திருக்க வேண்டும்.
இதை வங்கிகள் அந்தக் கணக்கின் பராமரிப்பு உள்ளிட்ட விஷயங்களுக்கு மினிமம் பேலன்ஸை பயன்படுத்தும்.
ஆனால், இந்த மினிமம் பேலன்ஸை அனைவராலும் எப்போது வைத்திருக்க முடியாது. அப்படியான சூழலில், அந்த வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் அபராதம் விதிக்கும்.
ஆனால், இதற்கு சில வங்கிகள் விதிவிலக்கு. அந்த வங்கிகள் வாடிக்கையாளர்கள் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும் என்று கூறுவதில்லை.

அவை எது எது என்று தெரிந்துகொள்வோமா?
பேங்க் ஆஃப் பரோடா: இந்த வங்கி சமீபத்தில் 'வங்கி கணக்கிற்கு மினிமம் பேலன்ஸ் தேவையில்லை' என்று அறிவித்திருக்கிறது. இது கடந்த 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
ஆனால், இது பிரீமியம் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பொருந்தாது.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா: இந்த வங்கி 2020-ம் ஆண்டில் இருந்து, மினிமம் பேலன்ஸ் வைத்திருக்காத சேமிப்பு கணக்குகளுக்கு அபராதம் விதிப்பதில்லை.
பஞ்சாப் தேசிய வங்கி: இந்த வங்கியும் கடந்த 1-ம் தேதியில் இருந்து தான், இந்த நடைமுறையை கொண்டு வந்துள்ளது. இந்த வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்க, மினிமம் பேலன்ஸ் தேவையில்லை.
இந்தியன் வங்கி: கடந்த 7-ம் தேதி முதல், இந்தியன் வங்கியின் எந்த சேமிப்பு கணக்கிற்கு மினிமம் பேலன்ஸ் தேவையில்லை.

கனரா வங்கி: இந்த வங்கி கடந்த மே மாதம் முதல், கனரா வங்கியின் எந்த கணக்குகளுக்கு மினிமம் பேலன்ஸ் தேவையில்லை.
பேங்க் ஆஃப் இந்தியா: இந்த வங்கியிலும் மினிமம் பேலன்ஸ் தேவையில்லை.
ஐசிஐசிஐ, ஹெச்.டி.எஃப்.சி போன்ற சில தனியார் வங்கிகளிலும் மினிமம் பேலன்ஸ் கட்டாயமில்லாத வங்கி கணக்கு உள்ளது. ஆனால், இது அனைத்து வகை சேமிப்பு கணக்குகளுக்கும் இல்லை.