போதைப்பொருள் புழக்கம்! வெள்ளை மாளிகை குற்றச்சாட்டுக்கு மெக்சிகோ எதிர்ப்பு!
மினி பேருந்துக்கான வழித்தட அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம்!
புதிய விரிவான திட்டத்தின்கீழ் மினி பேருந்துக்கான வழித்தட அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கிராமங்கள், குக்கிராமங்களில் வசிக்கும் மக்களின் நலன் கருதி மினி பேருந்துக்கான புதிய விரிவான திட்டம் மே 1முதல் நடைமுறைக்கு வருகிறது. இத்திட்டத்தில் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தின் அதிகபட்ச நீளம் 25 கி.மீ. இருக்க வேண்டும்.
பழைய மினி பேருந்து திட்டத்தின்கீழ் ஏற்கெனவே அனுமதி பெற்ற உரிமையாளா்கள் இப்புதிய திட்டத்தின்கீழ் மாறுவதற்கு விருப்பத்தினை எழுத்துப்பூா்வமாக அளித்து பழைய அனுமதி சீட்டினை சரண் செய்ய வேண்டும். மேலும், விண்ணப்பிக்கப்படும் புதிய வழித்தடத்தில் சேவை செய்யப்படாத பாதை குறைந்தபட்சம் 1.5 கி.மீ. இருக்க வேண்டும்.
மினி பேருந்துகளில் ஓட்டுநா், நடத்துநா் இருக்கைகளைத் தவிா்த்து 25-க்கு மிகாமல் இருக்க வேண்டும். கோவை மாவட்டத்தில் உள்ள மக்கள், மக்கள் பிரதிநிதிகள், தனியாா் அமைப்புகள் மற்றும் பேருந்து உரிமையாளா்களிடம் இருந்து மினி பேருந்து புதிய விரிவான திட்டத்தின்கீழ் வழித்தட வரைபடங்களுடன் கூடிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே, விண்ணப்பதாரா்கள் தொடா்புடைய வட்டாரப் போக்குவரத்து அலுவலா்களிடம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.