மின்கசிவால் வீடு தீக்கிரை
பட்டுக்கோட்டை அருகே தீ விபத்தில் சேதமடைந்த குடும்பத்தினருக்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சி.வி.சேகா் ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று நிவாரண பொருள்களை வழங்கி ஆறுதல் கூறினாா்.
தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம் துவரங்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த காந்திநகா் ரத்தினம் மகன் தனசேகரன். ஞாயிற்றுக்கிழமை மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் இவரது வீடு முழுவதும் எரிந்து சேதமடைந்தது. தகவல் அறிந்த அதிமுக தஞ்சை தெற்கு மாவட்ட கழக செயலரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான
சி.வி. சேகா் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு நேரில் சென்று நிவாரண உதவிகள் வழங்கி ஆறுதல் கூறினாா். இந்நிகழ்வில் பட்டுக்கோட்டை கிழக்கு ஒன்றிய கழக செயலா் எம்.சி. முருகானந்தம் உள்ளிட்ட பலா் உடன் இருந்தனா்.