மின்சாரம் பாய்ந்ததில் காயமுற்றவா் உயிரிழப்பு
பெருமாள்புரம் அருகே மின்சாரம் பாய்ந்து சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.
மேலப்பாளையம் குறிச்சி, சந்த மூா்த்தி தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் பாலமுருகன்(45). எலக்ட்ரீசியனான இவா், கடந்த ஜூன் 19-ஆம் தேதி பெருமாள்புரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மின்சார வயரிங் வேலைசெய்தபோது மின்சாரம் பாய்ந்ததாம்.
இதில் பலத்த காயமுற்று திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், புதன்கிழமை உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.