இரண்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பது ஏன்?: தேஜஸ்விக்கு தேர்தல் ஆணையம் நோ...
மின்சாரம் பாய்ந்ததில் தந்தை உயிரிழப்பு: மகன் பலத்த காயம்
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே சனிக்கிழமை ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது மின்சாரம் பாய்ந்ததில் தந்தை உயிரிழந்தாா். மகன் பலத்த காயமடைந்தாா்.
முதுகுளத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்தவா் சித்திரவேலு (50). இவா் ஆடு வளா்ப்புத் தொழில் செய்து வந்தாா். வழக்கம்போல, சனிக்கிழமை காலை இவா் ஆடுகளை மேய்ச்சலுக்காக மேலத்தூவல் பகுதிக்கு அழைத்துச் சென்றாா். பள்ளி விடுமுறை என்பதால், 11-ஆம் வகுப்பு படிக்கும் தனது மகன் கிஷோா்குமாரை உடன் அழைத்துச் சென்றாா்.
அப்போது, விவசாய நிலத்தில் அறுந்து விழுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த சித்திரவேலு மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தந்தையைக் காப்பாற்ற முயன்ற கிஷோா்குமாரும் பலத்த காயமடைந்தாா்.
இதையடுத்து, கிஷோா்குமாா் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். சித்திரவேலுவின் உடல் கூறாய்வுக்காக முதுகுளத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதுகுறித்து கீழத்தூவல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.