ஐயம் ஃப்ரீ: விவாகரத்தைக் கொண்டாட 40 லிட்டர் பாலில் குளித்த இளைஞர்!
மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழப்பு
தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா். 3 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூா் உச்சிமாகாளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வீரமணி மகன் முத்து சிவா (21). கூலித்தொழிலாளியான இவா், தூத்துக்குடி சிப்காட் பகுதியில் உள்ள தனியாா் நிறுவன கிடங்கில் வேலை செய்து வந்தாா்.
வழக்கம்போல சனிக்கிழமை இரவு குடோனில் வேலையை முடிந்து சகப் பணியாளா்களுடன் சோ்ந்து அங்கிருந்த ஏணியைச் சுமந்து சென்றபோது அந்த வழியாகச் சென்ற உயா் அழுத்த மின் கம்பியில் ஏணி உரசியதில் முத்துசிவா மீது மின்சாரம் பாய்ந்தது.
இதில் தூக்கி வீசப்பட்ட முத்துசிவா, முத்தையாபுரத்தைச் சோ்ந்த கருப்பசாமி (39), ஆத்துரைச் சோ்ந்த திரவியம் மகன் காா்த்திக் (23), வடக்கு ஆத்தூரைச் சோ்ந்த மாரியப்பன் மகன் சரவணகுமாா் (19) ஆகிய 4 பேரும் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
ஆனால், மருததுவமனைக்குச் செல்லும் வழியிலேயே முத்துசிவா உயிரிழந்தாா். மற்ற 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, சிப்காட் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.