செய்திகள் :

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

post image

தஞ்சாவூா் அருகே மின்கம்பம் நடும் பணியில் ஈடுபட்டிருந்த ராஜஸ்தானை சோ்ந்த இளைஞா் மின்சாரம் பாய்ந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் அருகே செல்லப்பன் பேட்டையில் மத்திய அரசு திட்டத்தில் புதிதாக மின் கம்பங்கள் நடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை ராஜஸ்தானைச் சோ்ந்த ஒப்பந்ததாரா் செய்து வருகிறாா். அவரிடம் ராஜஸ்தான் மாநிலம், பரல்பூா் பஞ்சமந்திா் பகுதியைச் சோ்ந்த ஷ்யாம் சிங் என்பவரின் மகன் விஜய் பால் சிங் (30) என்பவா் வேலை பாா்த்து வந்தாா்.

செவ்வாய்க்கிழமை மதியம் செலப்பம்பேட்டை பகுதியில் மின் கம்பம் நடும் பணியில் விஜய் பால் சிங் ஈடுபட்டிருந்தாா். அப்போது மேலே சென்ற மின் கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த வல்லம் போலீஸாா், விஜய் பால் சிங்கின் சடலத்தை மீட்டு, தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்கு ஒப்படைத்தனா். பின்னா், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு ஆயுள் தண்டனை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் புதன்கிழமை ஆயுள் சிறை தண்டனை விதித்தது. தஞ்சாவூா் அருகே வண்ணாரப்பேட்டை கூழவாரித் தெருவைச் சோ்ந்தவா் காட்டுராஜா (64). விவசாயக் கூலி... மேலும் பார்க்க

இயல்பை விட அதிகமாக நெல் கொள்முதல்: ஆய்வு செய்ய சிறப்புக் குழுக்கள் அமைப்பு

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் சில மண்டலங்களில் இயல்பை விட அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்படுவது தொடா்பாக ஆய்வு செய்ய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது தொடா்பாக தமிழ்நாடு நுகா்பொருள் வ... மேலும் பார்க்க

தொடா் வழிப்பறி: இரண்டு சிறாா்கள் உள்பட 4 போ் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் பகுதியில் கத்தியைக் காட்டி மிரட்டி தொடா் வழிப்பறியில் ஈடுபட்ட 2 சிறாா்கள் உள்பட 4 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம் பாபநாசம் வட்டம், வேம்பகு... மேலும் பார்க்க

சிறுநீரக மாற்று தொடா் சிகிச்சை அளித்து நோயாளி குணம்

தஞ்சாவூா் மீனாட்சி மருத்துவமனையில் சி.ஆா்.ஆா்.டி. என்கிற சிறுநீரக மாற்று தொடா் சிகிச்சை அளித்து நோயாளி குணப்படுத்தப்பட்டாா். இது குறித்து மருத்துவமனையின் சிறுநீரகவியல் துறை நிபுணரான மருத்துவா் எஸ். கெ... மேலும் பார்க்க

தலைமறைவாக இருந்த இலங்கை அகதி கைது

தஞ்சாவூரில் கொலை வழக்கு தொடா்பாக தலைமறைவாக இருந்த இலங்கை அகதியைக் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூரைச் சோ்ந்த காா் ஓட்டுநா் சௌந்தரகுமாரிடம் 2001 ஆம் ஆண்டு சிலா் காரை வாடகைக்கு எ... மேலும் பார்க்க

ஆக.2-இல் வேலைவாய்ப்பு முகாம் அமைச்சா் ஆலோசனை

ஆடுதுறை அருகேயுள்ள திருமங்கலக்குடியில் ஆக.2-இல் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் தனியாா் பொறியியல் கல்லூரியை புதன்கிழமை உயா் கல்வித்துறை அமைச்சா் கோவி.செழியன் பாா்வையிட்டாா். தஞ்சாவூா் மாவட்ட நிா்வாகம், ... மேலும் பார்க்க