கரும்பலகையில் இருந்து கைப்பேசிக்கு மாறிவிட்டது கல்வி: மத்திய அமைச்சா் ராஜ்நாத் ச...
மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு
சென்னை: மாதவரத்தில் விநாயகா் சதுா்த்து விழாவுக்கு பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
புழல் அடுத்த கண்ணம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் பிரசாந்த் (22). இவா், திங்கள்கிழமை, மாதவரம் ராஜாஜி சாலையில் விநாயகா் சதுா்த்து விழாவுக்காக பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது, மேலே சென்ற உயா் மின்னழுத்தம் கொண்ட மின்கம்பியில் பந்தல் கம்பம் உரசியதில், அவா் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டாா்.
இதையடுத்து, அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். மாதவரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.