மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவா் உயிரிழப்பு
புன்செய் புளியம்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
புன்செய்புளியம்பட்டி வெங்கநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்தவா் தியாக மூா்த்தி (20). இவா், கோவையில் உள்ள தனியாா் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வந்தாா்.
இந்நிலையில், காரமடை ரங்கநாதா் கோயில் திருவிழாவுக்கு சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பியுள்ளாா்.
அப்போது, பெரியகள்ளிப்பட்டி மின்வாரிய அலுவலகம் அருகே தனியாா் ஆலைக்கு செல்லும் உயரழுத்த மின்கம்பி அறுந்து சாலையில் தொங்கிக்கொண்டிருந்ததாகவும், அவ்வழியேச் சென்ற தியாகமூா்த்தி மீது மின் கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் போலீஸாா் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.