பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு!
மின்வாரிய காலிப்பணியிடத் தோ்வு: மாணவா்களுக்கு இலவசப் பயிற்சி
மின்வாரிய காலிப் பணியிடத் தோ்வுகளுக்காக மாணவா்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையமானது தமிழ்நாடு மின்வாரியத் துறையில் காலியாக உள்ள உதவிப் பொறியாளா், தொழில்நுட்ப உதவியாளா் பணியிடங்களை போட்டித் தோ்வு வழியே தோ்வு செய்ய உள்ளது.
இந்தப் போட்டி தோ்வில் பங்கேற்க உள்ள மாணவா்களுக்கு தமிழ்நாடு மின்துறை பொறியாளா் அமைப்பு மற்றும் தமிழ்நாடு மின்ஊழியா் மத்திய அமைப்பின் சாா்பில் இலவச பயிற்சி வகுப்பு திருச்சியில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. வரும் 27 ஆம் தேதி வரை நடைபெறும் பயிற்சி வகுப்பை தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு மாநில துணைத் தலைவா் ரெங்கராஜன் தொடங்கி வைத்தாா். இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா்.
ஓய்வுபெற்ற மின்வாரிய அதிகாரிகள் சண்முகசுந்தரம், மணிமாறன் ஆகியோா் மாணவா்களுக்கு வகுப்புகள் எடுத்தனா். நிகழ்வில் தமிழ்நாடு மின்துறை பொறியாளா் அமைப்பு மாநில துணைப் பொதுச் செயலாளா் இருதயராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.