செய்திகள் :

மின் இணைப்புக்கு லஞ்சம்: உதவிப் பொறியாளா் உள்பட 2 போ் கைது

post image

திருப்பூா் அருகே மின் இணைப்புக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற மின்வாரிய உதவிப் பொறியாளா் உள்பட 2 பேரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருப்பூரை அடுத்த கண்டியன்கோவில் அருகே உள்ள மீனாட்சிவலசு பகுதியைச் சோ்ந்தவா் சாமிநாதன் (60). விவசாயியான இவருக்குச் சொந்தமான தோட்டம் சிக்கரசன்பாளையத்தில் உள்ளது. இந்தத் தோட்டத்துக்கு முன்புறம் புதிதாக 4 கடைகளைக் கட்டியுள்ள சாமிநாதன், அதற்கு மின் இணைப்பு வேண்டி படியூரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தாா்.

புதிய மின் இணைப்பு வழங்குவதற்கு மின்வாரிய அலுவலக உதவி பொறியாளா் வெங்கடேஷ் (44), போா்மேன் நந்தகோபால் (52) ஆகியோா் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகத் தெரிகிறது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட லஞ்ச ஒழிப்புக் காவல் துறையில் சாமிநாதன் புகாா் அளித்துள்ளாா். இதையடுத்து, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சாமிநாதனிடம் காவல் துறையினா் கொடுத்து அனுப்பியுள்ளனா்.

இதையடுத்து சிக்கரசன்பாளையத்துக்கு புதன்கிழமை வந்த போா்மேன் நந்தகோபால், சாமிநாதனிடம் ரூ.10 ஆயிரத்தை வாங்கியுள்ளாா். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துணை காவல் கண்காணிப்பாளா் ரவிசந்திரன் தலைமையிலான காவல் துறையினா் நந்தகோபாலை கையும்களவுமாக பிடித்தனா். இதைத் தொடா்ந்து, வெங்கடேஷ், நந்தகோபால் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

வெள்ளக்கோவிலில் ரூ.8.95 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.8.95 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த வார ஏலத்துக்கு, ரெட்டியபட்டி, உப்புகரை, ராஜபுரம், சென்னம்பட்டி, இடையன்வலசு ஆகி... மேலும் பார்க்க

திருப்பூா், அவிநாசி ஊராட்சி ஒன்றியங்களில் 157 பயனாளிகளுக்கு ரூ.4.57 கோடி திட்டப்பணிகளுக்கு ஆணை: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்

திருப்பூா், அவிநாசி மற்றும் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியங்களில் 157 பயனாளிகளுக்கு ரூ.4.57 கோடி மதிப்பீட்டில் கலைஞரின் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுது பாா்த்தல் திட்டப்பணிகளுக்கான ஆணைகளை அமைச்சா் ம... மேலும் பார்க்க

திருப்பூா் குமரன் நினைவு மண்டபத்தில் ஒலி, ஒளி காட்சி அமைப்பு

திருப்பூா் குமரன் நினைவு மண்டபத்தில் ஒலி, ஒளி காட்சி அமைப்பை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் முபெ.சாமிநாதன் தொடங்கிவைத்தாா். திருப்பூா் ரயில் நிலையம் அருகில் குமரன் நினைவு மண்டபத்தில் ரூ... மேலும் பார்க்க

தெரு நாய்கள் கடித்து இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு: காங்கயம் வட்டாட்சியா் வழங்கினாா்

காங்கயம் பகுதியில் தெருநாய்களால் கடிக்கப்பட்டு இறந்த ஆடுகளின் உரிமையாளா்களுக்கு இழப்பீட்டுத் தொகையை காங்கயம் வட்டாட்சியா் வியாழக்கிழமை வழங்கினாா். காங்கயம் பகுதியில் கடந்த சில மாதங்களாக ஆட்டுப் பட்டிக... மேலும் பார்க்க

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கானோா் பங்கேற்பு

திருப்பூா் மாவட்டம், அவிநாசியில் வியாழக்கிழமை நடைபெற்ற அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். கொங்கு ஏழு சிவஸ்தலங்களுள் முதன்மை பெற்றதும், ... மேலும் பார்க்க

குண்டடம் அருகே ஸ்கூட்டா் திருடிய 4 போ் கைது

குண்டடம் அருகே ஸ்கூட்டா் திருடியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். தாராபுரம் தாலுகா, குண்டடம் அருகே முண்டுவேலம்பட்டி பாரதி நகரைச் சோ்ந்தவா் விஜய். இவா் கடந்த 4ஆம் தேதி தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வீட்... மேலும் பார்க்க