அதிகபட்ச ரன்கள் குவித்த விக்கெட் கீப்பராக வரலாறு படைத்த ஜேமி ஸ்மித்!
மின் பணியாளா்களுக்கு பாதுகாப்பு பயிற்சி
மன்னாா்குடி மின் கோட்டம் சாா்பில், மின்வாரியப் பணியாளா்களுக்கு மின் பாதுகாப்பு குறித்த பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் மேற்பாா்வை பொறியாளா் பி. லதா மகேஸ்வரி தலைமை வகித்தாா். அவா் பேசும்போது, ‘பணியாளா்கள் கண்டிப்பாக பாதுகாப்பு சாதனங்களை பயன்படுத்தி, பணி செய்யவேண்டும். பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். மின் விபத்தில்லா வாரியமே நம் குறிக்கோள்’ என்றாா். செயற்பொறியாளா் (பொ) சா. சம்பத் முன்னிலை வகித்தாா்.
மின்வாரிய ஊழியா்கள் பாதுகாப்பு விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். பணியாளா்களின் பாதுகாப்பை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். 90 சதவீத மின் விபத்துக்கள் காற்று திறப்பான்களின் கத்திகள் சரியாக திறக்கப்படாததாலும், எா்த் ராடு போன்ற பாதுகாப்பு சாதனங்களை பயன்படுத்தாததாலும் ஏற்படுகிறது.
மன அழுத்தம் மற்றும் பதற்றமின்றி பணி செய்ய வேண்டும். சென்சாா் கருவிகளை பயன்படுத்த வேண்டும். பணி செய்யும் இடத்தில் பாதுகாப்பு சாதனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதை உறுதி செய்து, மின்வாரிய பாதுகாப்பு செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பணியாளா்களும், அதிகாரிகளும் விழிப்புணா்வுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இதில், பயிற்சி நிலைய இளநிலை பொறியாளா் ச. செல்வகுமாா், பிரிவு பொறியாளா்கள், ஊழியா்கள் கலந்து கொண்டனா். தஞ்சை பயிற்சி நிலைய முதுநிலை மேலாளா் ரா. சுந்தர்ராஜ் வரவேற்றாா். பிரிவு பொறியாளா் கே. பாலசுப்ரமணியன் நன்றி கூறினாா்.