என் மனம் கவர்ந்த அறம் காக்கும் தெய்வம் பறம்பு தலைவன் பாரி | #என்னுள்வேள்பாரி
மின் மாற்றியில் இருந்த காப்பா் பொருள்கள் திருட்டு
கள்ளக்குறிச்சி மாவட்டம், மலைக்கோட்டாலம் கிராமத்தில் மின் மாற்றியில் உள்ள காப்பா் பொருள்களை மா்ம நபா்கள் திங்கள்கிழமை திருடிச் சென்றனா்.
மலைக்கோட்டாலம் கிராமத்தில் சுப்பிரமணியன் விவசாய நிலம் அருகே இருந்த மின் மாற்றியை உடைத்து, அதிலிருந்த 155 காப்பா் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றுவிட்டனா்.
இதுகுறித்த புகாரின்பேரில், வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.