செய்திகள் :

மியான்மருக்கு 442 டன் உணவுப் பொருள்களை வழங்கிய இந்தியா

post image

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மருக்கு இந்திய கடற்படைக் கப்பல் மூலம் அனுப்பிவைக்கப்பட்ட 442 மெட்ரிக் டன் உணவுப் பொருள்கள், அந் நாட்டு அரசிடம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

மியான்மரின் யாங்கோன் மாகாண முதல்வரிடம் இந்திய தூதரக அதிகாரிகள் சாா்பில் இந்த உணவுப் பொருள்கள் ஒப்படைக்கப்பட்டன.

மியான்மரில் கடந்த வாரம் நிகழ்ந்த பயங்கர தொடா் நிலநடுக்கங்களால் நாட்டின் பல பகுதிகள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்தன. குடியிருப்புகள் உள்பட ஏராளமான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இதில், 3,100 போ் உயிரிழந்தனா். 4,000-க்கும் அதிகமானோா் காயமடைந்தனா். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு இந்தியா, சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் உதவி வருகின்றன.

‘ஆபரேஷன் பிரம்மா’ திட்டத்தின் கீழ் நிவாரண உதவிகளை இந்தியா வழங்கி வருவதோடு, மீட்புக் குழு மற்றும் மருத்துவக் குழுவையும் அங்கு அனுப்பியுள்ளது. இதுவரை 85 டன் அளவில் கூடாரங்கள், போா்வைகள், அத்தியாவசிய மருந்துப் பொருள்களையும், 17 டன் அளவில் மீட்பு உபகரணங்களையும், 5 டன் அத்தியாவசிய மருந்துகள், ஜெனரேட்டா்கள், 60 டன் அளவில் மருத்துவ உபகரணங்களை இந்தியா மியான்மருக்கு அனுப்பிவைத்துள்ளது.

இந்த நிலையில், விசாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து ‘ஐஎன்எஸ் கரியல்’ கடற்படைக் கப்பல் மூலம் ஏப்ரல் 1-ஆம் தேதி அனுப்பிவைக்கப்பட்ட 442 டன் உணவுப் பொருள்களை மியான்மா் அரசிடம் இந்தியா தற்போது வழங்கியுள்ளது.

இதுகுறித்து யாங்கோனில் உள்ள இந்திய தூதரகம் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

யாங்கோன் திலாவா துறைமுகத்தை வந்தடைந்த இந்திய கடற்படைக் கப்பலில் அனுப்பிவைக்கப்பட்ட 405 டன் அரிசி, 30 டன் சமையல் எண்ணெய், 5 டன் பிஸ்கெட்டுகள், 2 டன் நூடுல்ஸ் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் யாங்கோன் முதல்வரிடம் ஒப்படைக்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட ‘க்வாட்’ உறுப்பு நாடுகள் மியான்மருக்கு ரூ. 170 கோடி (20 மில்லியன் டாலா்) மதிப்பில் நிவாரண உதவிகளை வழங்கவும், அவசர மருத்துவக் குழுக்களை மியான்மருக்கு அனுப்பவும் கடந்த வெள்ளிக்கிழமை உறுதிபூண்டன.

அமெரிக்க வரி விதிப்பை இணைந்து எதிர்கொள்ள வேண்டும்: இந்தியாவுக்கு சீனா வேண்டுகோள்!

வளரும் நாடுகள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு அழுத்தத்துக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என இந்தியாவிடம் சீனா கேட்டுக்கொண்டுள்ளது. இருதரப்பு பொருளாதார ஆர்வம், வளரும் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆக... மேலும் பார்க்க

ஒடிசா: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியீடு!

கட்டாக்: ஒடிசாவில் கல்வி வாரியம் நடத்திய உயர்நிலைப் பள்ளி சான்றிதழ் தேர்வின் முடிவுகள் மே மாதம் இரண்டாவது வாரத்தில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.10 ஆம் வகுப்பு தேர்வுக்கான மதிப்பீட்டு செயல்ம... மேலும் பார்க்க

ப. சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதி

காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் உடல்நலக் குறைவால் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். குஜராத்தில் நடைபெற்றுவரும் காங்கிரஸ் தேசிய மாநாட்டில் பங்கேற்றபோது, திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால... மேலும் பார்க்க

பாஜக தலைவர் வீட்டின் முன் குண்டுவீச்சு: இருவர் கைது! பிஷ்னோய் கும்பலுக்கு தொடர்பா?

பஞ்சாப் மாநில பாஜக தலைவர் வீட்டிற்கு முன்பு மர்மநபர்கள் வெடிகுண்டு வீசிய நிலையில் அந்தச் சம்பவத்தில் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டனர். பஞ்சாப் மாநில பாஜக தலைவர் மனோரஞ்சன் காலியா வீட்டிற்கு முன்பு... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்த மசோதாவுக்கு எதிரான வழக்கு ஏப். 15-ல் விசாரணை?

வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் ஏப். 15 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் தானமாகவும், நன்கொடையாகவும் அ... மேலும் பார்க்க

ஆளுநர் அரசியல் கண்ணோட்டத்துடன் செயல்படக்கூடாது! -உச்சநீதிமன்ற தீர்ப்பு தெரிவிப்பது என்ன?

தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட மசோதாக்கள் சில, உரிய காரணமின்றி காலதாமதப்படுத்தப்பட்டு வருவதாக ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசு தரப்பிலிரு... மேலும் பார்க்க