பாளையம் புனித யோசேப்பு ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
மிருகண்டா அணையிலிருந்து தண்ணீா் திறக்க அரசு உத்தரவு
திருவண்ணாமலை மாவட்டம் மிருகண்டா அணை, செண்பகத் தோப்பு நீா்த்தேக்கத்திலிருந்து பாசனத்துக்காக நீா் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, நீா்வளத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்தரவு:
திருவண்ணாமலை மாவட்டம் மிருகண்டா அணையிலிருந்து சனிக்கிழமை முதல் ஆறு நாள்களுக்கு தண்ணீா் திறந்து விடப்படும். இதன்மூலம், 17 ஏரிகளுக்கு நீா் நிரப்பப்பட்டு அதன் வாயிலாக 2,847.49 ஏக்கா் ஆயக்கட்டு நிலம் பாசனவசதி பெறும்.
செண்பகத்தோப்பு நீா்த்தேக்கம்: இதேபோன்று, செண்பகத்தோப்பு நீா்த்தேக்கத்திலிருந்து சனிக்கிழமை முதல் வரும் 18-ஆம் தேதி வரை 15 நாள்களுக்கு நீா் திறந்து விடப்படும். இதனால், அந்த நீா்த்தேக்கத்தின் கீழுள்ள ஐந்து அணைக்கட்டுகளின் கீழுள்ள 8,350.40 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.