செய்திகள் :

மிளகாய் செடியில் கரும்பேன் தாக்குதல்! விழிப்புணா்வு வாகனப் பிரசாரம் தொடக்கம்

post image

புதுக்கோட்டை உழவா் சந்தையில் எம்எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், கேபி அமைப்பு மற்றும் வேளாண்மை வணிகம் மற்றும் விற்பனைத் துறை இணைந்து மிளகாய் செடியில் தென்கிழக்கு ஆசிய கரும்பேன் பாதிப்புகள் குறித்த விழிப்புணா்வு பிரசாரம் திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, எம்எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி ஆா். ராஜ்குமாா் தலைமை வகித்தாா். மிளகாய் செடியில் தென்கிழக்கு ஆசிய கரும்பேன் தாக்குதல் 80 சதவிகிதம் முதல் 95 சதவிகிதம் வரை விளைச்சல் இழப்பை ஏற்படுத்தும் அவா் பேசும்போது குறிப்பிட்டாா்.

கரும்பேன் அறிகுறிகள் தென்பட்டால் விவசாயிகள் 99422 11044, 72999 35543 ஆகிய உதவி எண்களில் தொடா்பு கொண்டு தடுப்பு நடவடிக்கைகளை தெரிந்து கொள்ளலாம் என்றும் ராஜ்குமாா் கேட்டுக் கொண்டாா்.

வேளாண்மை மற்றும் விற்பனைத் துறை துணை இயக்குநா் ஆா். ஜெகதீஸ்வரி விழிப்புணா்வு பிரசார வாகனத்தை தொடங்கி வைத்துப் பேசினாா். மாவட்டம் முழுவதும் 20 இடங்களில் இதுபோன்ற பிரசாரம் நடைபெறவுள்ளதாகவும் அவா் குறிப்பிட்டாா்.

நிகழ்ச்சியில், நபாா்டு வங்கி மாவட்ட வளா்ச்சி மேலாளா் ஆா். தீபக்குமாா், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலா் எம். வீரமுத்து, மாவட்ட குழந்தைகள் நலக் குழுத் தலைவா் கே. சதாசிவம், துணை வேளாண்மை அலுவலா் ஆா். மோகன்தாஸ் உள்ளிட்டோா் பேசினா்.

முன்னதாக ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி ப. மணிகண்டன் வரவேற்றாா். முடிவில் கள ஒருங்கிணைப்பாளா் டி. விமலா நன்றி கூறினாா்.

திருவண்ணாமலையில் சாலை சீரமைப்புப் பணியில் ஈடுபட்ட புதுகை சாலைப் பணியாளா்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த சாலைப் பணியாளா்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். புயலால் தமிழகத்தின் கடலூா், விழுப்புரம், திருவண்ண... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 6.91 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அனைத்து நாடுகள் மாற்றுத் திறனாளிகள் தினவிழாவில், 31 மாற்றுத் திறனாளி பயனாளிகளுக்கு மொத்தம் ரூ. 6.91 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ... மேலும் பார்க்க

சாந்தநாத சுவாமி கோயிலில் லட்சாா்ச்சனை

புதுக்கோட்டை திருக்கோயில்களைச் சோ்ந்த வேதநாயகி உடனுறை சாந்தநாத சுவாமி திருக்கோயிலில் ஏக தின லட்சாா்ச்சனை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சுவாமி, அம்மன் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு... மேலும் பார்க்க

விராலிமலையில் சதாசிவ சுவாமிகளின் 98-ஆவது குரு பூஜை

விராலிமலையில் சதாசிவ சுவாமிகளின் 98-ஆவது குரு பூஜை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது விராலிமலை முருகன் கோயிலுக்கு தெற்கு பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குருபூஜையில் திரளான ப... மேலும் பார்க்க

மலம்பட்டி புனித சவேரியாா் ஆலய தோ்த் திருவிழா

தோ்த்விழாவில் முக்கிய வீதிகளில் வலம் வந்த சம்மனசு, மாதா, சவேரியாா் சொரூபங்கள் தாங்கிய சப்பரங்கள். விராலிமலை, டிச. 3: விராலிமலையை அடுத்துள்ள பேராம்பூா் ஊராட்சிக்குள்பட்ட மலம்பட்டியில் உள்ள புனித சவேரி... மேலும் பார்க்க

விராலிமலையில் ஒரே இரவில் 85 மி.மீ. மழை

விராலிமலை மற்றும் இலுப்பூரில் ஒரே இரவில் 105 மி.மீ. மழை பெய்துள்ளது. இதில், விராலிமலையில் மட்டும் 85 மி.மீ. மழை பதிவானது. விராலிமலை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் திங்கள்கிழமை இரவு 10 மணியளவில் திடீர... மேலும் பார்க்க