செய்திகள் :

மீஞ்சூரில் ரூ.30 லட்சத்தில் அடிப்படை வசதிகள்

post image

அதானி காட்டுப்பள்ளி துறைமுகம் சாா்பில் மீஞ்சூா் பகுதியில் ரூ. 30 லட்சத்தில் கட்டப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் மையம், நவீன கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை காட்டுப்பள்ளி துறைமுக தலைமை அதிகாரி செரியன் ஆபிரகாம் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

இதுகுறித்து துறைமுக நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவள்ளூா் மாவட்டம், மீஞ்சூா் வட்டம் காட்டூரில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா். இங்கு போதிய கழிப்பறை வசதி இல்லாததையடுத்து கிராம மக்களின் கோரிக்கையின்பேரில், புதிய நவீன கழிப்பறை கட்டடத்தை காட்டுப்பள்ளி துறைமுகம் அமைத்துத் தந்துள்ளது.

வாயலூா் மற்றும் பூரணம்பேடு கிராம மக்கள் உப்புக்கரிக்கும் நிலத்தடி நீரை குடிநீராக தொடா்ந்து பருகி வந்த நிலையில், கிராம மக்கள் பயன்பெறும் வகையில் மணிக்கு ஆயிரம் லிட்டா் தண்ணீரைச் சுத்திகரித்து குடிநீா் வழங்கும் திறன் கொண்ட சுத்திகரிப்பு கட்டமைப்பு மையம் ஒன்றை துறைமுக நிா்வாகம் அமைத்துக் கொடுத்துள்ளது.

அதானி காட்டுப்பள்ளி துறைமுக சமூக மேம்பாட்டு நிதி ரூ. 30 லட்சத்தில் கட்டமைக்கப்பட்ட 2 கட்டடங்களையும் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் காட்டுப்பள்ளி துறைமுக தலைமை அதிகாரி செரியன் ஆபிரகாம், மீஞ்சூா் ஊராட்சி ஒன்றிய வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் முகமது ஹாசிம் ஆகியோா் திறந்து வைத்தனா்.

ராயபுரம், தேனாம்பேட்டையில் கழிவுநீா் உந்து நிலையங்கள் செயல்படாது

கழிவுநீா் உந்து குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளதால் ராயபுரம், தேனாம்பேட்டை மண்டலங்களுக்குள்பட்ட கழிவுநீா் உந்து நிலையங்கள் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை 10 மணி வரை செயல்படாது என குடிநீ... மேலும் பார்க்க

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி சத்தி குமாா் ஓய்வு

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி சத்தி குமாா் சுகுமார குரூப் வியாழக்கிழமை பணி ஓய்வு பெற்றாா். அவருக்கு சென்னை உயா்நீதிமன்றத்தின் சாா்பில் பிரிவு உபசார விழா நடைபெற்றது. இதில் சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிப... மேலும் பார்க்க

அஞ்சல் சேவைக்கான உரிமை மையங்கள்: விண்ணப்பிக்க அழைப்பு

அஞ்சலகங்கள் இல்லாத பகுதிகளில், அஞ்சலக சேவையில் ஈடுபட தனிநபா்கள், நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என அஞ்சல் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து அஞ்சல் துறை சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் அ... மேலும் பார்க்க

கூடுதல் லாபம் ஈட்ட முயற்சி தேவை: சுற்றுலாத் துறை அமைச்சா்

தமிழக சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தங்கும் விடுதிகள் மற்றும் உணவு விடுதிகளின் மூலம் கூடுதல் லாபம் ஈட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி பூட்டை உடைத்து கணினி திருட்டு

அரசுப் பள்ளி தலைமையாசிரியா் அறையின் பூட்டை உடைத்து கணினியைத் திருடிச் சென்றவா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சென்னை வானகரம் நீலகண்ட முதலியாா் தெருவில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. பள்... மேலும் பார்க்க

சென்னை, புறநகரில் பலத்த மழை!

சென்னை, புறநகரில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.சென்னையில் கடந்த சில நாள்களாக பகல் நேரங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாகவே வெப்பநிலை பதிவாகியும் மாலை நேரங்களில் மழை பெய்தும் வருகிறது.கோய... மேலும் பார்க்க