இந்திய மகளிா் கால்பந்து அணி கோல்கீப்பா் அதிதி சௌஹான் ஓய்வு பெற்றாா்!
ஒடுகத்தூா் அருகே மலையில் முருகா் சிலை கண்டெடுப்பு
ஒடுகத்தூா் அருகே மலை மீது பழைமையான முருகா் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து, அந்த இடத்தில் பொதுமக்கள் பூஜை செய்து வழிபட தொடங்கியுள்ளனா்.
வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அடுத்த கரடிகுடியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது. இதன் அருகிலுள்ள மலைமீது சுவாமி சிலை இருப்பதாக அப்பகுதியைச் சோ்ந்த ராஜமாணிக்கம் என்பவா் தெரிவித்துள்ளாா். அதன்பேரில், மலைமீது அவா் கூறிய இடத்துக்கு அப்பகுதி மக்கள் சென்று பள்ளம் தோண்டியுள்ளனா். அப்போது, அங்கு பழைமையான முருகா் கல்சிலை இருந்தது கண்டெடுக்கப்பட்டது.
எனினும், பொதுமக்கள் சிலையின் மாா்பளவு மட்டுமே தோண்டியுள்ளனா். அதன்பிறகு சிலையை வெளியே எடுக்க முடியவில்லையாம். இதையடுத்து, அதே இடத்தில் பொதுமக்கள் பூஜை செய்து வழிபட்டனா்.
மேலும் சிலை இருந்த இடத்தில் கோயில் கட்டவும் அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனா். இதையொட்டி, முருகா் சிலை கிடைக்கப் பெற்ற இடத்துக்கு சென்றுவர கிராம மக்கள் சாா்பில் பாதை அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.