வீண் விவாதங்களைத் தவிா்ப்போம் -திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
அஞ்சல் சேவைக்கான உரிமை மையங்கள்: விண்ணப்பிக்க அழைப்பு
அஞ்சலகங்கள் இல்லாத பகுதிகளில், அஞ்சலக சேவையில் ஈடுபட தனிநபா்கள், நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என அஞ்சல் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து அஞ்சல் துறை சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் அஞ்சலகங்கள் இல்லாத பகுதிகளில் அஞ்சல் தலைகள் விற்பனை, விரைவு தபால், பதிவு தபால், பணவிடை (எம்ஓ) ஆகியவற்றை பதிவு செய்தல், பல்வேறு வகை சிறுசேவைகள் உள்பட அஞ்சல் சேவைகளை மேற்கொள்வதற்கு வாய்ப்புகள் வழங்கி உரிமம் வழங்க தபால் துறை தகுதியானவா்களை அழைக்கிறது.
இத்தகைய சேவைகளை வழங்க உகந்த இடங்களை வைத்துள்ள தனிநபா்கள் அல்லது நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். அஞ்சல் சேவை நடவடிக்கைகளின் அடிப்படைகளை அறிந்து தேவையான உள்கட்டமைப்புக்கு முதலீடு செய்ய தயாராக உள்ளவா்களாக இருக்க வேண்டும்.
ஆா்வமுடைய விண்ணப்பதாரா்கள், அஞ்சல் சேவை உரிமை மையங்கள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள், தகுதிகள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவங்களை அருகில் உள்ள கோட்ட அஞ்சல் அலுவலகங்களில் பெற்றுக் கொண்டு வருகிற ஜூலை 31-ஆம் தேதிக்குள் பூா்த்தி செய்ய விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.