வீண் விவாதங்களைத் தவிா்ப்போம் -திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி சத்தி குமாா் ஓய்வு
சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி சத்தி குமாா் சுகுமார குரூப் வியாழக்கிழமை பணி ஓய்வு பெற்றாா்.
அவருக்கு சென்னை உயா்நீதிமன்றத்தின் சாா்பில் பிரிவு உபசார விழா நடைபெற்றது. இதில் சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆா்.ஸ்ரீராம், மூத்த நீதிபதிகள், மத்திய மாநில அரசு வழக்குரைஞா்கள், நீதிமன்றப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.
விழாவில், தமிழக அரசின் தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன் பிரிவு உபசார உரையாற்றினாா். தொடா்ந்து, நீதிபதி சத்தி குமாா் சுகுமார குரூப், சக நீதிபதிகள் மற்றும் வழக்குரைஞா்களுக்கு நன்றி தெரிவித்து ஏற்புரையாற்றினாா்.
நீதிபதி சத்தி குமாா் சுகுமார குரூப் ஓய்வு பெற்றதையடுத்து சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 58-ஆக குறைந்தது. 17 நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன.