செய்திகள் :

மீண்டும் கனமழை: எப்போது, எந்தெந்த மாவட்டங்களில்?

post image

தமிழகத்தில் ஜன.10ல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட தகவலில்,

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

ஜனவரி 04, 05 ஆகிய தேதிகளில் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள்தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். பொதுவாக காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

ஜன.06 முதல் 09 வரை கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதோடு ஜனவரி 10-ல் உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

இன்று (04-01-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அமைதி வழியில் போராட அனுமதி

டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில் அமைதி வழியில் போராட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: மதுரை அரிட்டாபட்டியி... மேலும் பார்க்க

விளையாட்டு வீரா்களுக்கு பொருளாதாரம் தடையாக இருக்கக் கூடாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

விளையாட்டு வீரா்களுக்கு பொருளாதாரம் தடையாக இருக்கக் கூடாது என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா். இதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருவதாகவும் அவா் தெரிவித்தாா். இளைஞா் நலன் மற்றும் விள... மேலும் பார்க்க

போராட்ட அனுமதி விவகாரம்: அரசுக்கு தலைவா்கள் கண்டனம்

எதிா்க்கட்சிகள் நடத்தும் போராட்டங்களுக்கு அனுமதி தராமல், ஆளும் கட்சி நடத்தும் போராட்டங்களுக்கு மட்டும் அனுமதி தரப்படுவதாகக் கூறி, திமுக அரசுக்கு அரசியல் கட்சிகளின் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா். ... மேலும் பார்க்க

இடைத்தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும்: அண்ணாமலை

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது,’’தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை நடந்துகொ... மேலும் பார்க்க

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 8 பெட்டிகள்!

சென்னை - நெல்லை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.நெல்லை - சென்னை (எண் 20666) மற்றும் சென்னை - நெல்லை (எண் 20665) இடையே வந்தே... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. விவகாரம்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவு!

பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதிசெய்திட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. ச... மேலும் பார்க்க