செய்திகள் :

மீண்டும் படப்பிடிப்பில் ஆந்திர துணை முதல்வர்!

post image

ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வர் பவன் கல்யான் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார்.

ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வராக கடந்த 2024-ம் ஆண்டு பதவியேற்றுக்கொண்ட பிரபல நடிகர் பவன் கல்யான், தனது அரசுப் பணிக்காரணமாக படப்பிடிப்புகளுக்கு நீண்ட விடுமுறை அளித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது மீண்டும் ஹைதரபாதில் நடைபெறும் படப்பிடிப்பில் அவர் ஈடுபட்டுள்ளதாக அவரது புதிய படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியுள்ளது.

இயக்குநர் சுஜீத் இயக்கத்தில் தே கால் ஹிம் ஓஜி (எ) ஓஜி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புதிய திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மி வில்லனாக நடிக்கின்றார்.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் மும்பைக்கு திரும்பும் தாதாவின் கதையை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதரபாத், தடேபள்ளி மற்றும் மும்பை நகரங்களில் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதில், பவன் கல்யானின் காட்சிகள் அனைத்தும் வரும் ஜூன் இரண்டாம் வாரத்திற்குள் படம்பிடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்தப் புதிய படத்தின் படப்பிடிப்பானது பவன் கல்யானின் அரசியல் ஈடுபாட்டினால் தள்ளிப்போனது.

வரும் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ள இந்தப் படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் துணை முதல்வர் பவன் கல்யான் நடித்திருப்பது அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இதையும் படிக்க: தக் லைஃப்: டிரைலர், இசை வெளியீட்டு விழா தேதிகள் அறிவிப்பு!

ஆபரேஷன் சிந்தூர்: காங்கிரஸ் கேள்வி; பாஜக பதில்

ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை நிறுத்தப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் பல்வேறு கேள்விகளை புதன்கிழமை எழுப்பியது.இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டது ஏன்?, எந்த வி... மேலும் பார்க்க

ஆகமம் அல்லாத கோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்கலாம்: உச்சநீதிமன்றம்

நமது நிருபர்ஆகமம் அல்லாத கோயில்களில் அர்ச்சர்களை நியமிக்கலாம் என உச்சநீதிமன்றம் புதன்கிழமை கூறியது. அதேவேளையில், ஆகம விதிகள் கடைப்பிடிக்கப்படும் கோயில்களை மூன்று மாதங்களுக்குள் கண்டறிய அதற்காக அமைக்கப... மேலும் பார்க்க

பாதசாரிகளுக்கு நடைபாதை: மாநில அரசுகள் வழிகாட்டுதல்களை வகுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

பாதசாரிகள் நடந்து செல்ல முறையாக நடைபாதைகள் இருப்பதை உறுதி செய்வதற்கு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. நடைபாதைகளில் ஆக்... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கிறிஸ்தவா்கள் வெளியேற்றம்: மனித உரிமைகள் ஆணையம் கவலை

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நிலஅபகரிப்பு கும்பலால் சிறுபான்மையினரான கிறிஸ்தவா்களுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, அவா்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு வருவது குறித்து அந்நாட்டு மனித ... மேலும் பார்க்க

‘அவசியமற்ற இடைவேளைகள் எடுக்கும் உயா்நீதிமன்ற நீதிபதிகள்’- செயல்திறன் தணிக்கைக்கு உச்சநீதிமன்றம் அழைப்பு

உயா்நீதிமன்ற நீதிபதிகள் குறித்து அவ்வப்போது புகாா்கள் வருவதாகவும், சிலா் பணிநேரங்களில் அவசியமற்ற இடைவேளைகளை எடுப்பதாகவும் உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அதிருப்தி தெரிவித்தது. மேலும், ‘உயா்நீதிமன்ற நீ... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி எதிரொலி: துருக்கியுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் ரத்து

துருக்கியின் இனோனு பல்கலைக்கழகத்துடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு இந்த ந... மேலும் பார்க்க