செய்திகள் :

மீண்டும் பெண் குழந்தை வேண்டாம்: சிரஞ்சீவி சர்ச்சை பேச்சு!

post image

பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி பெண் குழந்தை பெற்றெடுப்பது குறித்துப் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சிரஞ்சீவி தெலுங்கின் முன்னணி நடிகராக அறியப்படுபவர். 69 வயதான சிரஞ்சீவி இன்றும் படங்களில் நடித்து வருகிறார். திரைத் துறையில் இவரது சாதனைகளைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு ‘பத்ம விபூஷன்’ விருது வழங்கி கௌரவித்துள்ளது.

இவரது மகன் ராம் சரணும் தெலுங்கின் முன்னணி நடிகராக உள்ளார்.

இந்த நிலையில், நடிகர் பிரம்மானந்தம் நடித்துள்ள ’பிரம்மா ஆனந்தம்’ படத்தின் முன்னோட்ட நிகழ்வில் சிரஞ்சீவி கலந்து கொண்டு பேசியது சர்ச்சையாகியுள்ளது.

இதையும் படிக்க | விஜய் தேவரகொண்டாவின் புதிய படம்: டீசர் வெளியீடு!

அந்த நிகழ்வில் பேசிய சிரஞ்சீவி, “நான் வீட்டில் இருக்கும்போது பேத்திகளுடன் இருப்பதுபோல இருக்காது. பெண்கள் விடுதியில் இருக்கும் விடுதி காப்பாளரைப்போல உணர்வேன். என்னைச் சுற்றி பெண்கள் மட்டும்தான் இருப்பார்கள். 

அதனால் ராம் சரணிடம் இந்த முறையாவது ஒரு ஆண் குழந்தையைப் பெற்று தரும்படி கேட்டுள்ளேன். நமது பரம்பரையைத் தொடர வழிசெய்யுமாறு அவரை வாழ்த்தியுள்ளேன். ஆனால் அவருக்கோ அவருடைய மகள்தான் எல்லாமே. அதனால் மீண்டும் பெண் குழந்தையைப் பெற்றெடுப்பாரோ என்று பயமாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.  

சிரஞ்சீவி பேசியது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றது. 2025 ஆம் ஆண்டிலும் பிரபல நடிகராக இருக்கும் சிரஞ்சீவி பாலின வேறுபாட்டினை முன்னெடுக்கும் விதமாக பெண் குழந்தைகள் பெற்றெடுப்பதைத் தவிர்க்கும்படி பேசியிருப்பது கண்டிக்கதக்கது என பல்வேறு தரப்பினரும் அவரை விமர்சித்து வருகின்றனர்.

ராம் கோபால் வர்மா எழுத்தில் புதிய படம்! டிரைலர் வெளியீடு!

இயக்குநர் ராம் கோபால் வர்மா எழுத்தில் புதிய படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. சைக்கோ த்ரில்லர் படமாக உருவாகியுள்ள ‘சாரீ’ படத்தின் கதையை ராம் கோபால் வர்மா எழுதியுள்ளார். இந்தப் படத்தினை கிரி கிருஷ்ண கம... மேலும் பார்க்க

ரூ.100 கோடி வசூலை நோக்கி தண்டேல்!

நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் வெளியான தண்டேல் படம் ரூ.100 கோடி வசூலை நோக்கி பயணிக்கிறது.தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள தண்டேல் படம... மேலும் பார்க்க

வயலின் எல்லாம் ரெடியா..? ரெட்ரோ முதல் பாடலின் புரோமா!

நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ படத்தின் முதல் பாடலின் புரோமோ விடியோ வெளியாகியுள்ளது.நடிகர் சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான திரைப்படம் ரெட்ரோ.ஆக்சன் கலந்த காதல் கதையாக உருவாகியுள்ள இப்பட... மேலும் பார்க்க

விக்ரம் பிரபுவின் புதிய பட போஸ்டர்!

நடிகர் விக்ரம் பிரபுவின் புதிய படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. ஷண்முக பிரியன் இயக்கும் லவ் மேரேஜ் படத்தினை ஸ்வேதா, ஸ்ரீநிதி சாகர் தயாரிக்கிறார்கள். இதில் சுஸ்மிதா பட், மீனாக்‌ஷி தினேஷ்,... மேலும் பார்க்க

லிஜோ மோலின் ஜென்டில்வுமன் டீசர்!

லிஜோமோல், ஹரிகிருஷ்ணன் நடிப்பில் உருவாகியுள்ள ஜென்டில்வுமன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.அறிமுக இயக்குநர் ஜோஸ்வா சேதுராமன் இயக்கத்தில் ஒரே ஆணுடன் உறவிலிருக்கும் இரு பெண்களின் கதையாக ஜென்டில்வுமன் தி... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் லீக்கில் சாதனை படைத்த எர்லிங் ஹாலண்ட்..!

மான்செஸ்டர் சிட்டி கால்பந்து வீரர் எர்லிங் ஹாலண்ட் சாம்பியன்ஸ் லீக்கில் புதிய சாதனை படைத்துள்ளார். சாம்பியன்ஸ் லீக் பிளே -ஆஃப் லெக் 1 போட்டியில் ரியல் மாட்ரிட், மான்செஸ்டர் சிட்டி அணிகள் மோதின.முதல் ப... மேலும் பார்க்க