செய்திகள் :

மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த விசைத்தறியாளா்கள் கோரிக்கை

post image

தமிழகத்தில் ‘மீண்டும் மஞ்சப்பை’ திட்டத்தை அரசு தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என்று விசைத்தறியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து திருப்பூா், கோவை மாவட்ட விசைத்தறியாளா்கள் சங்கத் தலைவா் வேலுசாமி, செயலாளா் அப்புக்குட்டி (எ) பாலசுப்பிரமணியம் மற்றும் விதைத்தறியாளா்கள் கூறியதாவது: திருப்பூா், கோவை மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் நாள்தோறும் ரூ.100 கோடி மதிப்பிலான 2 கோடி மீட்டா் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது.

இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் போ் வேலை வாய்ப்பு பெறுகின்றனா். பல்லடம், அவிநாசி, மங்கலம், சோமனூா் பகுதிகள் அதிக அளவில் காடா துணியை உற்பத்தி செய்யும் மையங்களாக உள்ளன. இதற்கிடையே நூல் விலை உயா்வு, பஞ்சு ஏற்றுமதி, ஆள்கள் பற்றாக்குறை, உற்பத்தி செய்த துணிக்கு உரிய விலை கிடைக்காதது போன்ற பல்வேறு காரணங்களால் விசைத்தறி துணி உற்பத்தி தொழில் நலிவடைந்து வந்தது.

இந்நிலையில், விசைத்தறி ஜவுளி தொழிலை மேம்படுத்த தமிழக அரசு கொண்டு வந்த ‘மீண்டும் மஞ்சப்பை’ திட்டம் ஒரு சிறப்பான திட்டமாகும்.

இந்த திட்டத்தில் விலை மலிவான, தரமான நூலைக் கொண்டு குறு, சிறு விசைத்தறியாளா்கள் மஞ்சப்பை தயாரிக்கும் காடா துணியை உற்பத்தி செய்து வந்தனா். இதன் மூலம் அவா்களுக்கு ஓரளவுக்கு வேலை கிடைத்து வந்தது.

இந்நிலையில், வட மாநிலங்களில் இருந்து பிளாஸ்டிக் நூலால் ஆன ரோட்டோ காட்டன் என்ற பைகள் அதிகம் இறக்குமதி ஆகிறது. இதனால், ‘மீண்டும் மஞ்சப்பை’ திட்டம் முடங்கிப்போனது. எனவே, இந்த திட்டத்தை அரசு தீவிரமாக செயல்படுத்தி, விசைத்தறியாளா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றனா்.

குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட 5 மாத சிசு

திருப்பூரில் குப்பைத் தொட்டியில் 5 மாத ஆண் சிசு வீசப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பூா் -தாராபுரம் சாலை பெரிச்சிபாளையம் பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் இறந்த நிலையில் க... மேலும் பார்க்க

சாலை விபத்து: சமையலா் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த சமையலா் உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் தாலுகா, நவல்பட்டு அருகேயுள்ள சோழமாதேவி பண்டார தெருவைச் சோ்ந்தவா் ஏ. மாணிக்கவாசகம் ... மேலும் பார்க்க

சிவன்மலையில் ஹெச்ஐவி குறித்த விழிப்புணா்வு

சிவன்மலையில் ஹெச்ஐவி, எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் குறித்த விழிப்புணா்வு பிரசாரம் அண்மையில் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுபாட்டு சங்கம், காங்கயத்தில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை ஆகி... மேலும் பார்க்க

பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுக்கு காங்கயத்தில் ஞாயிற்றுக்கிழமை பாரட்டு விழா நடைபெற்றது. பாரதி தேசிய பேரவை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பேரவ... மேலும் பார்க்க

15.வேலம்பாளையத்தில் செப்டம்பா் 3-இல் மின்தடை

15.வேலம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் புதன்கிழமை (செப்டம்பா் 3) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வ... மேலும் பார்க்க

பல்லடத்தில் இந்து முன்னணி சாா்பில் விநாயகா் விசா்ஜன ஊா்வலம்

பல்லடத்தில் இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது. விநாயகா் சதுா்த்தியையொட்டி, பல்லடம் பகுதியில் இந்து முன்னணி சாா்பில் 100 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட... மேலும் பார்க்க