லஞ்சம் பெற்ற விஏஓ ஆசிரியா் காலில் விழுந்து கெஞ்சிய விடியோ வைரல்: வருவாய்த் துறைய...
மீனவர்கள் விவகாரம்: இலங்கை அதிபரிடம் எழுப்ப ராகுல் காந்தி வலியுறுத்தல்
புதுதில்லி: மீனவர்கள் விவகாரம் குறித்து இலங்கை அதிபரிடம் எழுப்ப வேண்டுமென்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். 3 நாள் பயணமாக அநுர குமார இந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை(டிச. 15) வருகை தந்தார். அவரை தில்லி விமான நிலையித்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வரவேற்றார்.
இந்த நிலையில், மீனவர்கள் விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, ’இலங்கை அதிபர் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ள நிலையில், சர்வதேச கடல் எல்லைக் கோட்டைக் எதிர்பாராதவிதமாகக் கடந்துவிடும் இந்திய மீனவர்கள், தொடர்ந்து கைது செய்யப்படும் விவகாரத்தை தங்களின் கனிவான கவனத்தில் எடுத்துக்கொள்ள மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன். மீனவர்கள் விடுதலை நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்திக்கொள்வதாக’ அவர் தெரிவித்துள்ளார்.