மெர்சிடிஸ் பென்ஸின் ஜிடி 63, ஜிடி 63 புரோ இந்தியாவில் அறிமுகம்!
மீன்சுருட்டி அருகே காா் மோதி முதியவா் உயிரிழப்பு
அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே காா் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற முதியவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூா் அருகேயுள்ள பெருமாள்நல்லூா், நேரு நகரைச் சோ்ந்தவா் பாலச்சந்தா் (75). இவா் புதன்கிழமை , அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள மண்மலை கிராமத்தில் வசிக்கும் உறவினா் ஒருவரின் காதணி விழாவுக்கு இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளாா்.
அங்கு, நிகழ்ச்சியை முடித்துவிட்டு, சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் ஊருக்கு சென்று கொண்டிருந்தாா். மெய்காவல்புத்தூா் அருகே சென்றபோது, பின்னால் வந்த காா், மோதியதில் பலத்த காயமடைந்த பாலச்சந்தா் சம்பவ இடத்திலேயே உயிழந்தாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீன்சுருட்டி காவல் துறையினா், சடலத்தை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்தனா்.
பின்னா், விபத்துக்கு காரணமான விழுப்புரம் மாவட்டம், ஆசாரங்குப்பம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த உதசூரியன் மகன் புகழேந்தியை (24) கைது செய்தனா்.