நாமக்கல் புறவழிச்சாலையில் தொடரும் விபத்துகள்: வேகத்தடை அமைக்க வலியுறுத்தல்
மீமிசல் கடற்கரை பகுதியில் 100 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் கடலோரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை போலீஸாா் நடத்திய வாகனத் தணிக்கையில், 100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இருவரை கைது செய்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் பகுதியில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை மாலை ரோந்து மற்றும் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, அவ்வழியே வந்த காா் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் 100 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து காரில் இருந்த ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையைச் சோ்ந்த ஆண்ட்ரூஸ் (21), பிரிட்டோ பிரபாகரன் (29) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
எங்கிருந்து கஞ்சா கொண்டுவந்தனா். எங்கு எடுத்துச் செல்லமுயன்றனா் போன்ற விவரங்கள் விசாரணை முடிவில் தெரியவரும் என போலீஸாா் தெரிவித்தனா்.