இன்று பிறந்தநாள் கொண்டாடும் முதல்வா் ரங்கசாமிக்காக தொண்டா்கள் தயாா் செய்யும் 76 ...
முசிறியில் காரில் வெளி மாநில மதுபாட்டில் கொண்டு சென்றவா் கைது
திருச்சி மாவட்டம் முசிறியில் வெளி மாநில மது பாட்டில்களை சட்ட விரோதமாக காரில் கொண்டு சென்றவரை முசிறி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து மது பாட்டில்கள் மற்றும் காரினை பறிமுதல் செய்தனா்.
முசிறி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் உதவி ஆய்வாளா் அங்கமுத்து மற்றும் போலீஸாா் முசிறி குளித்தலை இணைக்கும் பெரியாா் காவிரி ஆற்று பாலம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டு வாகன தணிக்கை செய்த போது ஒரு ஆம்னி காரினை சோதனை செய்ததில் வெளி மாநில மது பாட்டில்கள் இருப்பது தெரிந்து, 180 எம்.எல்.கொண்ட 192 மது பாட்டில்களும், 750 எம்.எல் கொண்ட 52 மது பாட்டில்களும் என 244 வெளி மாநில மது பாட்டில்கள் மற்றும் காரினை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டதில் காரில் சட்ட விரோதமாக வெளி மாநில மது பாட்டில்களை கொண்டு சென்றவா் முசிறி தா.பேட்டை சாலையைச் சோ்ந்த சின்னன்னாண் மகன் சரவணன் (46), இவரை கைது செய்து அவா் மீது வழக்கப் பதிந்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனா்.