Coolie : "அப்பாவுக்கு விக்ரம் படத்தைக் கொடுத்ததற்கு நன்றி லோகேஷ்!" - விழாவில் ஷ்...
முதல்முறையாக தேசிய விருது: சிறந்த நடிகையாக ராணி முகர்ஜி!
சிறந்த நடிகைக்கான தேசிய விருது பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி தேர்வாகியுள்ளார்.
மத்திய அரசு வழங்கும் 71-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தமுறை 2023 படங்களுக்கு விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன. சிறந்த நடிகராக ஷாருக் கானும் விக்ராந்த் மாஸ்ஸியும் தேர்வாகினர்.
சிறந்த நடிகைக்கான விருது ராணி முகர்ஜிக்கு மிர்சஸ் சாட்டர்ஜி வெர்சஸ் நார்வே படத்துக்காக வழங்கப்பட்டுள்ளது.
ஆசிமா சிப்பர் இயக்கத்தில் 2023-இல் வெளியான இந்தப் படத்தில் ராணி முகர்ஜி தாயாக சிறப்பாக நடித்திருப்பார்.
நார்வேயில் நடந்த உண்மைக் கதையை மையாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் ராணி முகர்ஜியின் நடிப்பு வெளியான போதே விமர்சகர்களால் பாராட்டப்பட்டது.

இது இவருக்கு முதல் தேசிய விருது என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த துணை நடிகைக்கான விருது ஊர்வசிக்கு உள்ளொழுக்கு படத்துக்காக வழங்கப்பட்டது.