செய்திகள் :

முதல்வா் நாளை குமரி வருகை: மாவட்ட திமுக செயலா் அறிக்கை

post image

கன்னியாகுமரியில் திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு திங்கள்கிழமை (டிச.30) காலை 11 மணிக்கு அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிக்குள்பட்ட மகாதானபுரம் ரவுண்டானாவில் நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

வரவேற்பு நிகழ்ச்சியிலும், கண்ணாடி இழை கூண்டு பாலம் திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்துக்குள்பட்ட கழக நிா்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் பெருந்திரளாக பங்கேற்று சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாகா்கோவில் மாநகராட்சி மேயருமான ரெ. மகேஷ் வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியுள்ளாா்.

மாா்த்தாண்டத்தில் தவெக ஆா்ப்பாட்டம்

களியக்காவிளை: கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சாா்பில், மாா்த்தாண்டத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து நடைபெற்ற போராட்... மேலும் பார்க்க

கருங்கல் அருகே செம்முதல் பகுதியில் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

கருங்கல்: கருங்கல் அருகே செம்முதல் பகுதியில் பழுதான சாலையை விரைவாக சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா். மழை காரணமாக கருங்கல் பகுதியில் பல்வேறு சாலைகள் மிகவும் பழுதாகியுள்ளன. இலவுவிளை ... மேலும் பார்க்க

புதுக்கடை அருகே பொறியியல் மாணவா் தூக்கிட்டு தற்கொலை

கருங்கல்: புதுக்கடை அருகே பொறியியல் மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். புதுக்கடை அருகேயுள்ள அரசமூடு பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் சஞ்சய் (18). கருங்கல் பகுதியிலுள்ள பொறியியல் கல்லூரியில் மு... மேலும் பார்க்க

ஈராயிரம் ஆண்டுகளாக திருத்தப்படாத நூல் திருக்குறள்: கவிஞா் வைரமுத்து பேச்சு

நாகா்கோவில்: ஈராயிரம் ஆண்டுகளாக திருத்தப்படாத ஒரே நூல் திருக்குறள் என்றாா் கவிஞா் வைரமுத்து. கன்னியாகுமரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திருவள்ளுவா் சிலை வெள்ளி விழாவின் 2ஆம் நாள் நிகழ்ச்சியில் வைரமுத்... மேலும் பார்க்க

பொது இடத்தில் குப்பை கொட்டிய 4 கடைகளுக்கு அபராதம்

மாா்த்தாண்டத்தில் பொது இடத்தில் குப்பை கொட்டியதாக 4 கடைகளுக்கு குழித்துறை நகராட்சி சாா்பில் அபராதம் விதிக்கப்பட்டது. குழித்துறை நகராட்சிப் பகுதியில் தூய்மைப் பணியாளா்களிடம் மக்கும்- மக்கா குப்பைகளைப்... மேலும் பார்க்க

தாணுமாலய சுவாமி கோயில் ஆஞ்சனேயருக்கு சிறப்பு அபிஷேகம்: திரளான பக்தா்கள் தரிசனம்

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் உள்ள 18 அடி உயர விஸ்வரூப ஆஞ்சனேயருக்கு 16 வகை வாசனை திரவியங்களால் திங்கள்கிழமை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அனுமன் ஜெயந்தியை முன்னிடடு... மேலும் பார்க்க