மகா கும்பமேளாவில் கங்கை நதிநீா் நீராடியதற்கு ஏற்றதே! -மத்திய மாசுக் கட்டுப்பாட்ட...
முதல்வா் மருந்தகங்களில் ஆட்சியா் ஆய்வு
அரியலூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் முதல்வா் மருந்தகங்களில் ஆட்சியா் பொ. ரத்தினசாமி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
முதல்வா் மருந்தகத்தில் விற்பனை செய்யப்படும் மருந்துகளின் இருப்பு நிலை மற்றும் மருந்து பொருள்களின் காலாவதி நாள், பொதுமக்கள் அதிகளவில் வாங்கும் மருந்து, மாத்திரைகள் விவரம், கணினியில் பதிவாகியுள்ள விற்பனை விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி, அரியலூா் மாவட்டத்தில் 24.2.2025 முதல் 6.3.2025 வரையில் ரூ.51,865 மதிப்பிலான மருந்து மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு 2,031 போ் பயன்பெற்றுளதாக தெரிவித்தாா்.
பின்னா், அரியலூா், கள்ளங்குறிச்சி சாலை, சாஸ்திரி நகரில் உள்ள முதல்வா் மருந்தக மருந்து கிடங்கை பாா்வையிட்டு, இருப்பில் உள்ள மருந்து பொருள்களின் விவரம் குறித்து ஆய்வு செய்தாா்.