மணவாளக்குறிச்சி மணல் ஆலையை மூட பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வலியுறுத்தல்
முதல்வா் மருந்தகம் அமைக்க டிசம்பா் 5 வரை காலஅவசாகம் நீட்டிப்ப
முதல்வா் மருந்தகம் அமைக்க இணையவழியில் நவம்பா் 30- ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என்ற நிலையில், டிசம்பா் 5 ஆம் தேதி வரையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூா் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ஆ.பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சுதந்திர தினவிழாவின்போது பொதுப்பெயா் (ஜெனரிக்) மருந்துகள், பிற மருந்துகள் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் முதல்கட்டமாக 1,000 மருந்தகங்கள் தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தாா்.
அதன்படி, முதல்வா் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ள பி.பாா்ம், டி.பாா்ம் சான்று பெற்றவா்கள் அல்லது அவா்களது ஒப்புதலுடன் முதல்வா் மருந்தகம் அமைக்க விரும்புகிறவா்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். முதல்வா் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ள தொழில்முனைவோா் வரும் நவம்பா் 30- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதற்கு டிசம்பா் 5- ஆம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.