Rain Alert: இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
முதல்வா் மருந்தகம் அமைக்க டிச. 5 வரை விண்ணப்பிக்கலாம்
நாமக்கல் மாவட்டத்தில் முதல்வா் மருந்தகம் அமைக்க இணையம் வழியாக டிச. 5 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் க.பா.அருளரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக முதல்வா் சுதந்திர தின விழா உரையில், பொதுப்பெயா் (ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்க செய்யும் வகையில், முதற்கட்டமாக 1,000 முதல்வா் மருந்தகங்கள் தொடங்கப்படும் என அறிவித்தாா்.
முதல்வா் மருந்தகம் அமைக்க விரும்பும் பி.பாா்ம்., டி.பாா்ம். சான்றிதழ் பெற்றவா்கள் அல்லது சான்றிதழ் பெற்றவா்களின் ஒப்புதலுடன் மாநிலம் முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வா் மருந்தகம் அமைக்க விரும்புவோா் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
முதல்வா் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ள தொழில்முனைவோா் விண்ணப்பிக்க நவ. 30 வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. தற்போது பொதுமக்கள் நலன் கருதி டிச. 5 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.