செய்திகள் :

முதல் போட்டி தோல்வி குறித்து அதிகம் கவலைப்படவில்லை: கேகேஆர் பயிற்சியாளர்

post image

ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து அதிகம் கவலைப்படவில்லை என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் அண்மையில் தொடங்கியது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது.

அதிகம் கவலைப்படவில்லை

நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இந்த ஐபிஎல் தொடரை தோல்வியுடன் தொடங்கியுள்ள நிலையில், முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து அதிகம் கவலைப்படவில்லை என அந்த அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஒரு அணியாக முதல் போட்டியில் ஏற்டட்ட தோல்வி குறித்து நாங்கள் அதிகம் கவலைப்படவில்லை. முதல் போட்டியில் வெல்வது என்பது எப்போதும் சிறப்பான விஷயம். முதல் போட்டியில் வெற்றி பெற்றால் நேர்மறையான தொடக்கமாக இருந்திருக்கும். ஆனால், முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்வியிலிருந்து நாங்கள் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டோம் என்றார்.

இதையும் படிக்க:நான் இம்பாக்ட் பிளேயர் கிடையாது; என்ன சொல்கிறார் எம்.எஸ்.தோனி?

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நாளை (மார்ச் 26) ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் விளையாடவுள்ளது.

வெற்றிப் பாதைக்கு திரும்புவது யார்? ராஜஸ்தானுடன் இன்று சென்னை மோதல்!

சொந்த மண்ணில் தோற்ற அதிா்ச்சியில் உள்ள சென்னை சூப்பா் கிங்ஸ் அணி ஞாயிற்றுக்கிழமை முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிா்கொள்கிறது.ஐபிஎல் 2025 தொடரின் 11-ஆவது ஆட்டமாக இரு அணிகள் குவாஹாட்டியின... மேலும் பார்க்க

2-வது போட்டியிலும் தோல்வி: குஜராத்திடம் வீழ்ந்தது மும்பை!

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 36 ரன்கள் வித்தியசாத்தில் தோல்வியைத் தழுவியது.ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நடைபெற்ற இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் ... மேலும் பார்க்க

சன்ரைசர்ஸின் அதிரடியை கட்டுப்படுத்துவோம்: தில்லி கேபிடல்ஸ் இளம் வீரர்

சன்ரைசர்ஸ் ஹைதராபாதின் அதிரடியை கட்டுப்படுத்துவோம் என தில்லி கேபிடல்ஸின் இளம் வீரர் தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் அண்மையில் தொடங்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதுவரை 8 போட்டி... மேலும் பார்க்க

சாய் சுதர்ஷன் அரைசதம்; மும்பை இந்தியன்ஸுக்கு 197 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நடைபெற்று வரும் இன்றைய ஆட்டத்தில் மும்பை இ... மேலும் பார்க்க

சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவுக்கு சாதகமான சூழல் இல்லையா? புஜாராவுக்கு அதிர்ச்சியளித்த ஃபிளெமிங்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியடைந்தது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் புஜாரா பேசியுள்ளார்.ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற நேற்றை... மேலும் பார்க்க

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக மும்பை பந்துவீச்சு; முதல் வெற்றி கிடைக்குமா?

ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நடைபெறும் இன்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் ... மேலும் பார்க்க