செய்திகள் :

முதல் 2 வாரங்களுக்கு மாணவர்கள் புத்தகங்கள் கொண்டுவரத் தேவையில்லை! - கேரள அரசு அறிவிப்பு

post image

கேரளத்தில் வருகிற ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கும்போது மாணவர்கள் முதல் 2 வாரங்களுக்கு பாடப் புத்தகங்கள் கொண்டுவரத் தேவையில்லை என அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.

பள்ளி மாணவ, மாணவியருக்கு தேர்வுகள் முடிந்து தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் ஜூன் முதல் வாரம் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

அந்தவகையில் கேரளத்தில் 2025-26 கல்வியாண்டுக்கு ஜூன் மாதம் பள்ளிகள் திறந்தபின், முதல் 2 வாரங்களுக்கு மாணவர்கள் பாடப் புத்தகங்கள் கொண்டுவரத் தேவையில்லை என்று கூறியுள்ளது.

அந்த 2 வாரங்களுக்கு மாணவர்களுக்கு சமூகப் பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளதாகவும் அதுதொடர்பான பாடங்களை ஆசிரியர்கள் கற்பிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள், சுகாதார பிரச்னைகள், சமூக ஊடகங்களின் பயன்பாடு, சட்ட விதிகள், குற்றச் செயல்கள், சுற்றுச்சூழல் ஆகியவை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு வகுப்புகள் எடுக்கப்பட உள்ளன.

இதற்காக காவல்துறை, குழந்தைகள் உரிமைகள் ஆணையம், தேசிய சுகாதார இயக்கம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைப்பைச் சேர்ந்தவர்கள் கல்வித் துறைக்கு இதுதொடர்பான வழிமுறைகளை வழங்கியுள்ளதாக கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்தார்.

நாட்டிலேயே முதல்முறையாக மாணவர்களுக்கு பள்ளியிலேயே விழிப்புணர்வு ஏற்படுத்த கேரள அரசு இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | அமெரிக்கா மீது வரியைக் குறைத்த இந்தியா? டிரம்ப்பின் பேச்சால் மீண்டும் குழப்பம்!

ம.பி.: இளைஞரைக் கொன்று உடலில் பாதியை தின்ற புலி

மத்தியப் பிரதேசத்தில் பீடி இலைகளை சேகரிக்க சென்ற இளைஞரை கொன்று உடலில் பாதியை தின்ற புலியால் பரபரப்பு நிலவியது. மத்தியப் பிரதேசத்தின் பாலகாட் மாவட்டத்தில் உள்ள கட்டாங்கி வனப்பகுதியில் பீடி இலைகளைச் சேக... மேலும் பார்க்க

பிரதமரின் உறுதியான அரசியல் நிலைப்பாட்டின் அடையாளம் ‘ஆபரேஷன் சிந்தூா்’: அமித் ஷா

பிரதமா் நரேந்திர மோடியின் உறுதியான அரசியல் நிலைப்பாட்டின் தனி அடையாளம் ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்று உள்துறை அமைச்சா் அமித் ஷா பெருமிதம் தெரிவித்தாா். மேலும், ‘நாட்டின் பல்வேறு பாதுகாப்பு முகமைகளின் துல்லி... மேலும் பார்க்க

மும்பை விமான நிலையம், தாஜ் ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மும்பை விமான நிலையம், தாஜ் ஹோட்டலுக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், மும்பை விமான நிலையம் மற்றும் தாஜ் ஹோட்டலுக்கு மிரட்டல் விட... மேலும் பார்க்க

தெலங்கானாவில் இஸ்ரேல் கொடியை அகற்றியவர் கைது!

தெலங்கானா மாநிலத்தில் இஸ்ரேல் கொடியை அகற்றியவர் கைது செய்யப்பட்டுள்ளார். தெலங்கானாவில் நடைபெறும் உலக அழகிப் போட்டியை முன்னிட்டு, ஹைதரபாத்திலுள்ள அம்மாநில அரசின் தலைமைச் செயலகம் அருகில் இஸ்ரேல் நாட்டின... மேலும் பார்க்க

கேதார்நாத்தில் எய்ம்ஸ் ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்

தொழில்நுட்பக் கோளாறு கேதார்நாத்தில் எய்ம்ஸ் ஹெலிகாப்டர் சனிக்கிழமை அவசரமாக தரையிறக்கப்பட்டது. உத்தரகண்ட் மாநிலம், ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் நிறுவனத்தால் 'சஞ்சீவனி' எனும் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் இயக்கப்பட... மேலும் பார்க்க

உத்தரகண்ட்: புனித யாத்திரைத் தலங்களை நிர்வகிக்க புதிய குழு! அமைச்சரவை ஒப்புதல்!

உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள புனித யாத்திரைத் தலங்களை நிர்வகிக்க புதிய குழு அமைக்கப்படவுள்ளது.உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான அமைச்சரவையில் அம்மாநிலத்திலுள்ள சார் தாம் மற்றும் ஆதி கைலாஷ்... மேலும் பார்க்க