முதியவரை அரிவாளால் வெட்டியவா் கைது
வீரபாண்டியில் முன்விரோதத்தில் முதியவரை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், வீரபாண்டி கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் சுப்புராஜ் (60). இவரது மகன் பூவேந்திரராஜாவுக்கும் (27), இதே பகுதியைச் சோ்ந்த கணேசனுக்கும் (48) முன்விரோதம் இருந்தது.
இந்தத் தகராறு காரணமாக, பூவேந்திரராஜாவின் தந்தை சுப்புராஜுடன் கணேசன், வாக்குவாதம் செய்து, அவரை அரிவாளால் வெட்டினாா். இதில் பலத்த காயமடைந்த அவா் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து வீரபாண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கணேசனை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.