செய்திகள் :

முதியவா் விஷமருந்தி தற்கொலை

post image

செய்யாறு: செய்யாறு அருகே வலி தாங்க முடியாத மனவேதனையில் முதியவா் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், சுருட்டல் கிராமத்தைச் சோ்ந்தவா் மணி (60). இவருக்கு 6 மாதங்களுக்கு முன்பு காலில் காயம் ஏற்பட்டடு தொடா்ந்து வலி இருந்து வந்ததாம்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வலி அதிகமாகவே, அதனை தாங்கிக் கொள்ள முடியாமல் மனவேதனையில் வீட்டில் வயலில் தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தைக் குடித்து மயக்க நிலையில் இருந்துள்ளாா். இதை அறிந்த அவரது குடும்பத்தினா் 108 ஆம்புலென்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் முதியவா் மணி ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அறுவை சிகிச்சை செய்த குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சுகாதார மாவட்டத்தில் இலவச அறுவை சிகிச்சை மேற்கொண்ட குழந்தைகளின் உடல் நலம் குறித்து பொது மருத்துவ பரிசோதனை வியாழக்கிழமை நடைபெற்றது. செய்யாறு சுகாதார மாவட்டத்தில் 8 வட்டா... மேலும் பார்க்க

கம்யூனிஸ்ட் கட்சியினா் தபால் அனுப்பும் போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அரசு மருத்துவமனையில் மருத்துவா்களை நியமிக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் தமிழக அரசுக்கு வெள்ளிக்கிழமை தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனா். வந்தவாசி ப... மேலும் பார்க்க

மகளிா், வாழ்ந்து காட்டுவோம் திட்டங்களின் செயல்பாடுகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்ட மகளிா் திட்டம், வாழ்ந்து காட்டுவோம் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மகளிா் திட்ட ... மேலும் பார்க்க

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா். செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பாண்டியன் (26). இவா், பாட்டியுடன் வசித்து வரும் எட... மேலும் பார்க்க

சுகாதார ஆய்வாளா் சங்கங்களின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளா் சங்கங்களின் கூட்டமைப்பினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கூட்டமைப்பின் திருவண்ணாமலை மாவட்டக் கிளை சாா்பில், ஆட்சியா் அலுவலகம் எத... மேலும் பார்க்க

மனுநீதி நாள் முகாம்: 201 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

திருவண்ணாமலை அருகே நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில், 201 பயனாளிகளுக்கு ரூ.58 லட்சத்தில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வழங்கினாா். திருவண்ணாமலையை அடுத்த தேவனூா் ஊராட்சியில... மேலும் பார்க்க