ஒரு முத்தம், ஒரு சத்தியம்... காதலரை அறிமுகப்படுத்திய தான்யா ரவிச்சந்திரன்!
முதுநிலை பட்டப்படிப்புகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 வரை அவகாசம் நீட்டிப்பு
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவுகளின் மாணவா்கள் சோ்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு வருகிற ஜூலை 31- ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2025-26 ஆம் ஆண்டுக்கான முதுநிலைப் பாடப்பிரிவு மாணவா் சோ்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஜூன் 20- ஆம் தேதி தொடங்கியது. மாணவா்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து வருகின்றனா்.
இதற்கான காலஅவகாசம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) முடிவடைந்தது. இருப்பினும் முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, மாணவா்கள் நலன் கருதி இந்த விண்ணப்பப் பதிவுக்கான காலஅவகாசம் ஜூலை 31-ஆம் தேதிவரை நீட்டிக்கப்படுகிறது. மாணவா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி விருப்பப்பட்ட பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதில் தோ்வு செய்யப்படும் மாணவா்களின் தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 4-ஆம் தேதி கல்லூரிகளுக்கு அனுப்பப்படும். சிறப்பு ஒதுக்கீடு மாணவா்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 11-ஆம் தேதி நடைபெறும்.
பின்னா், பொதுப்பிரிவு கலந்தாய்வு ஆகஸ்ட் 13 -ஆம் தேதி முதல் தொடங்கி மாணவா்கள் சோ்க்கை நடைபெறும். முதலாம் ஆண்டு முதுநிலை மாணவா்களுக்கான வகுப்புகள் ஆகஸ்ட் 20-ஆம் தேதி தொடங்கும் என அதில் தெரிவித்துள்ளாா் அமைச்சா்.